சூடு பிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்…! பணம் விநியோகத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் அதிரடி…!

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித் துறை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 27.02.2023 அன்று இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் செலவைக் கண்காணிக்க வருமானவரி தலைமை இயக்குநரகத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமானவரி தலைமை இயக்குநரகம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் தகவல்களை இந்தக் கட்டுப்பாட்டு மையம் பெற்றுக்கொள்ளும்.

மக்கள் 1800 425 6669 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலம் புகார் செய்யலாம் ‌. அதேபோல, 044-2827 1915 என்ற தொலைபேசி எண்ணிலும், itcontrol.chn@gov.in என்ற மின்னஞ்சல், 94453 94453 வாட்ஸ் அப் எண் ஆகியவை மூலம் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிக்கும் நபர்களின் விவரம் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

’எங்கு பார்த்தாலும் அழு குரல்’..!! உலகை உலுக்கிய நிலநடுக்கம்..!! பலி எண்ணிக்கை 12,000ஆக உயர்வு..!!

Thu Feb 9 , 2023
துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் கடந்த 3 நாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் அங்குள்ள நகரங்கள் உருக்குலைந்தன. துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 12,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலநடுக்கத்தால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதமடைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட […]
நிம்மதியை கெடுத்த நிலநடுக்கம்..!! நெஞ்சை உலுக்கும் புகைப்படம்..!! இறந்த மகளின் கையை 3 நாளாக பிடித்திருந்த தந்தை..!!

You May Like