கல்வி அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை..! தர்ணா போராட்டம் நடத்திய பெண்..! "அந்த மனசு தான் சார் கடவுள்"..! சோகத்திலும் ரசிகர்களை நெகிழ வைத்த விஜய்..! வைரல் வீடியோ.. கணவரும், அவரது அண்ணனும் சேர்ந்து பாலியல் தொல்லை..! கொரோனா என நாடகமாடி ஆம்புலன்ஸில் தப்பி ஓடிய பெண்..! ஜிம் உரிமையாளருடன் தலைமறைவான மனைவி..! மீட்டு தரக் கூறி கணவர் புகார்..! எஸ்.பி.பி.யின் முழுப் பெயரைச் சொல்லி அழைப்பவர் இன்று வரை இவர் மட்டுமே..! சொந்த மக்களை கொன்ற வெட்கமில்லாத நாடு பாகிஸ்தான்… இந்தியா கடும் குற்றச்சாட்டு! எஸ்.பி.பி.யின் இறுதி சடங்கில் புகுந்த திருடர்கள்..! 5 செல்போன்கள் களவு..! சிஎஸ்கே-வில் மீண்டும் "சின்னத்தல"?.. அடுத்த போட்டியில் ராயுடு..! சிஎஸ்கேவில் அடுத்தடுத்த திருப்பம்..! தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது…பாடும் நிலா விண்ணில் இருந்து பாடட்டும்… நடிகை நயன்தாரா இரங்கல்! அடுத்தடுத்த போட்டிகளில் அஸ்வின் விளையாட மாட்டார்..! கேப்டன் அளித்த விளக்கம் இதுதான்..! எஸ்.பி.பி.க்கு பதிலாக எம்.பி.க்கு இரங்கல் தெரிவித்த சயின்டிஸ்ட் செல்லூர் ராஜூ..! ஜிம் உரிமையாளருடன் ஜூட் அடித்த மனைவி… காவல் நிலையத்தில் கணவர் புகார்! கோலி பேட்டிங் குறித்து கவாஸ்கர் கூறிய சர்ச்சை கருத்து.. அனுஷ்காவிற்கு கங்கனா ஆதரவு.. ஆனால்.. எஸ்பிபி தன் மனைவியிடம் சொன்ன கடைசி வார்த்தை..! உருகும் ரசிகர்கள்..! காதில் மாட்டிய உடனே தானாக On ஆகும் புதிய ஹெட்செட் இந்தியாவில் அறிமுகம்… விலை எவ்வளவு தெரியுமா!

#BreakingNews : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மற்ற மாவட்டங்களில் என்ன நிலை..?

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1,11,151-ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில்

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து, 3,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தகுறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ இன்று புதிதாக 4,150 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,11,151- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,713 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 68,251-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 2,437 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

coronaindia south

மதுரையில் இன்று மட்டும் 308 பெருக்கும், செங்கல்பட்டில் இன்று மட்டும் 274 பேருக்கும். திருவள்ளூரில் இன்று 209 பேருக்கும் நோய்த்தொற்று உறுதியானது. இதேபோல் காஞ்சிபுரத்தில் 152 பேருக்கும், திருவண்ணாமலையில் 138 பேருக்கும், விருதுநகரில் 113 பேருக்கும், விழுப்புரத்தில் 109 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

இன்று ஒரே நாளில் 2,186 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 62,778-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 60 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 1,510-ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மொத்தம் 46,860 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

ஸ்பானிஷ் காய்ச்சல் மட்டுமல்ல, கொரோனாவிற்கும் குட்பை சொன்ன 106 வயது தாத்தா.. டெல்லியில் புதிய நம்பிக்கை..

Sun Jul 5 , 2020
டெல்லியில் 106 வயதான முதியவர் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சம்பவம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு 4 வயதாக இருந்த போது, 1818-ம் ஆண்டு பரவிய ஸ்பானிஷ் காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுவன், தனது 106-வது வயதில் தற்போது உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ள சம்பவம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட 106 வயது முதியவர் அங்குள்ள ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]
106 வயது

You May Like