மசோதா நகல் கிழிப்பு.. மைக் உடைப்பு.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 2 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றம்.. விஷம் தடவிய கடிதம் அனுப்பி அதிபரை கொல்ல சதி? தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..!

#BreakingNews : தமிழகத்தில் இன்றும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையில் குறைவு.. மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்…

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 1.7 லட்சமாக உயர்ந்துள்ளது.

கொரோனா

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்தாலும் நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து, 3,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய கொரோனா பாதிப்பு தகுறித்து சுகாதாரத்துறை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் “ இன்று புதிதாக 4,280 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,07,001- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,842 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66,531-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 2,438 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகத்தில்

செங்கல்பட்டில் இன்று மட்டும் 215 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6,355-ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் இன்று ஒரே நாளில் 352 பேருக்கு தொற்று கண்டறிப்பட்டதால் மொத்த பாதிப்பு 3,776-ஆக உயர்ந்துள்ளது. திருவள்ளூரில் இன்று 251 பேருக்கு நோய்த்தொற்று உறுதியானது இதனால் அங்கு மொத்த பாதிப்பு 4,596-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் காஞ்சிபுரத்தில் 134 பேருக்கும், திருவண்ணாமலையில் 173 பேருக்கும், ராமநாதபுரத்தில் 149 பேருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.

இன்று ஒரே நாளில் 2,214 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 60,592-ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 65 பேர் உயிரிழந்ததால், கொரோனா பலி எண்ணிக்கை 1,450-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 58,378 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், 47,235 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

இந்தியாவின் கொரோனா தடுப்பு ஊசியை முதலில் செலுத்தி கொண்ட நபர்..அதீத நம்பிக்கை?

Sat Jul 4 , 2020
கொரோனாவுக்கான இந்தியவாவின் முதல் தடுப்பு ஊசியை, பாரத் பயோடெக் நிறுவனத்தின் துணைத்தலைவர் டாக்டர் வி.கே ஸ்ரீனிவாஸ் முதல் நபராக செலுத்திக் கொண்டுள்ளார். கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. ஐதராபாத்தை சேர்ந்த தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக் நிறுவனம், இந்தியாவின் முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக அறிவித்தது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்), தேசிய […]

You May Like