27-ம் தேதி முதல் மார்ச் 1 வரை பயணம் செய்ய முடியாது.. கொரோனா பரவலால் அரசு அறிவிப்பு.. ரகசிய சுரங்கப்பாதை மூலம் இந்தியாவில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. வீடியோ ஆதாரம்.. பின்வாங்கிப் போகும் யானையைக் கொளுத்துவது நாட்டுமிராண்டித்தனமா? கமல் கேள்வி.. மதுபோதையில் தகராறு.. பிரபல நடிகர் மீது காவல்துறையில் புகார்… கமலா என்ற பெயர் இருந்தால் போதும்.. இந்த தீம் பார்க்கில் அனுமதி இலவசம்..!! மணமகளுடன் படுக்கறைக்கு செல்லும் பெண்.. ஏன் தெரியுமா..? வித்தியாசமான திருமண சடங்குகள்.. இந்தியாவுக்கும் மோடிக்கும் நன்றி தெரிவித்த WHO தலைவர்.. இதுதான் காரணம்.. மார்ச் 1 வரை பயணங்களுக்கு தடை.. கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் அறிவிப்பு.. 5 மாதங்களில் 31 முறை கொரோனா பாசிட்டவான பெண்.. குழப்பத்தில் மருத்துவர்கள்.. கொரோனா பாசிட்டிவானதால் சசிகலா இருக்கும் மருத்துவமனையில் இளவரசியும் அனுமதி.. Truecaller-ல் உங்கள் பெயர் தவறாக இருக்கிறதா..? அதை எப்படி மாற்றுவது..? எளியவழிகள் இதோ.. சிறையில் இருந்த 4 வருஷமா ஒண்ணும் ஆகல.. இப்ப திடீருன்னு எப்படி..? சசிகலா உடல்நிலை குறித்து சீமான் கேள்வி… "நான் நடிப்பை விட காரணமே இது தான்" உண்மையை போட்டுடைத்த அப்பாஸ்..! இந்த ஒரு தவளையின் விலை 1.50 லட்சம் ரூபாயாம்..! அப்படி இதில் என்ன இருக்கிறது தெரியுமா..? "அந்த பொண்ண கல்யாணம் பண்ணலாம்னு இருக்கேன்" போதையில் உளறிய கணவன்..! ஓட ஓட வெட்டி கொன்ற மனைவி..!

#BreakingNews : தொடர்ந்து 5வது நாளாக புதிய உச்சம்.. தமிழகத்தில் இன்று மட்டும் 1384 பேருக்கு கொரோனா தொற்று..

தொடர்ந்து 5வது நாளாக புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியுள்ளது.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 4 கட்டங்களை கடந்து தற்போது 5-ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்தபாட்டில்லை. இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,304 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் இந்தியாவில் சுமார் 2 லட்சத்து 16 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 4 நாட்களாகவே சராசரியாக 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 25,000-ஐ தாண்டியுள்ளது. எனவே, இந்தியாவில் அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தொடர்ந்து தமிழகம் 2-வது இடத்திலேயே உள்ளது.

899772 coronavirus 6

இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதுகுறித்து சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 1,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256 ஆக அதிகரித்துள்ளது.

இன்று சென்னையில் மட்டும் 1072 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,670-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளாதால் கொரோனா பலி எண்ணிக்கை 220-ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பு

இன்று மட்டும் 585 பேர் குணமடைந்ததால், கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14,901-ஆக அதிகரித்துள்ளது. தற்போது 12,000 பேர் மருத்துவமனையில் கொரொனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

சென்னை புறநகர் பகுதிகளில் திடீர் மழை.. மக்கள் மகிழ்ச்சி..!!

Thu Jun 4 , 2020
சென்னை புறநகர் பகுதிகளில் இன்று பெய்த திடீர் மழையால், மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்கள் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயில் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில், கேரளா மற்றும் தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர், திருத்தணி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை பலத்த மழை […]
தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை..! கொட்டித்தீர்க்கும் கனமழை..! தொடர்ந்து எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

You May Like