பொதுமக்கள் கவனத்திற்கு… மீண்டும் “மெகா தடுப்பூசி முகாம்‌” இன்று காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை மட்டுமே…!

தமிழ்நாடு முழுவதும்‌ கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ கட்டுபடுத்திட தமிழக முதல்வர்‌ ஆணையின்படி “மெகா தடுப்பூசி முகாம்‌” நடத்தப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தில்‌ கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பெருந்தொற்றினை கட்டுப்படுத்திட தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள்‌ மற்றும்‌ நடவடிக்கைகள்‌ எடுத்து வருகிறது. 6-ம் தேதி வரை தருமபுரி மாவட்டத்தில்‌ 12 வயதுக்கு மேல்‌ முதல்‌ தவணை 1,14,087 பயனாளிகளுக்கும்‌. இரண்டாம்‌ தவணை 9,91,797 பயனாளிகளுக்கும்‌, முன்னெச்சரிக்கை தவணை 10934 பயனாளிகளுக்கும்‌ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்..!

கொரோனா பெருந்தொற்று பரவலை முழுமையான வகையில்‌ வெல்ல,. தடுப்பூசி ஒன்றே பேராயுதம்‌ என்பதால்‌ இன்று காலை 7 மணி முதல்‌ மாலை 7 மணி வரை அனைத்து அரசு மருத்துவமனைகள்‌, ஆரம்ப சுகாதார நிலையங்கள்‌, துணை சுகாதார நிலையங்கள்‌ மற்றும்‌ 2,084 சிறப்பு முகாம்களில்‌ 100% தடுப்பூசி செலுத்துவதை இலக்காக கொண்டு “மெகா தடுப்பூசி முகாம்‌” நடைபெறவுள்ளது. மாற்றுத்திறனாளிகள்‌, வயது முதிர்ந்தோர்‌ மற்றும்‌ நடக்க முடியாத நபர்களுக்கு வீட்டிற்கே சென்று தடுப்பூசி போட சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, விடுபட்டு போன முன்களப்பணியாளர்கள்‌, முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்‌ மற்றும்‌ இரண்டாவது தடுப்பூசி தவணை செலுத்திக்‌ கொள்ளவுள்ள நபர்கள்‌ தானாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறு தெரிவித்துக்கொள்ளப்படு கிறார்கள்‌.

மேலும்‌, 12 முதல்‌ 18 வயதுடைய மாணவ, மாணவியர்கள்‌ தவறாமல்‌ தடுப்பூசி செலுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்‌. மேலும்‌ 05.01.2022-க்கு முன்‌ இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்‌ கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்கள்‌, சுகாதார பணியாளர்கள்‌ மற்றும்‌ முன்களப்பணியாளர்கள்‌ ஆகியோர்‌ அனைவரும்‌ தவறாது பூஸ்டர்‌ தடுப்பூசி” செலுத்திக்கொள்ள வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Also Read: கவனம்.. 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு இனி இது கிடையாது…! அனைத்தையும் ரத்து செய்து அரசு திடீர் உத்தரவு…! 

Vignesh

Next Post

நாடு முழுவதும் சமையல் எண்ணெய்க்கு ஒரே மாதிரியான விலை..! மத்திய அரசு பரபரப்பு தகவல்

Sun Jul 10 , 2022
ஒரே பிராண்டின் கீழ் தயாரிக்கப்படும் எண்ணெய்-க்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியா சமையல் எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. ஆனால், ரஷ்யா – உக்ரைன் போர், இந்தோனேசியா, மலேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு தடை போன்றவற்றால் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தோனேசியாவில் பாமாயில் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு நீக்கப்பட்டதை அடுத்து, சர்வதேச அளவில் […]
சூப்பர் அறிவிப்பு..!! அதிரடியாக குறைந்தது சமையல் எண்ணெய் விலை..!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி..!!

You May Like