பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை… மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் நாகை மாவட்டம், நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

நாகை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நாகை மாவட்டம், நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.. அதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது.. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு நாகை நகரம் மற்றும் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது..” என்று தெரிவித்துள்ளார்..

.

Maha

Next Post

மகாராஷ்டிரா கனமழை.. ஜூலை 14 வரை 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்...

Tue Jul 12 , 2022
மகாராஷ்டிராவின் 5 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.. நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாநிலங்களில் இடைவிடாத கனமழை பெய்து வருகிறது.. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக முடங்கி உள்ளது.. அந்த வகையில் மகாராஷ்டிராவில் கடந்த சில நாட்களாகவே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது… மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் கனமழை மற்றும் இடைவிடாத மழை காரணமாக நாசிக் மாவட்டத்தில் உள்ள பல […]
தமிழகத்திற்கு அலெர்ட்..!! 8 மாவட்டங்களில் மிக கனமழை..!! மற்ற மாவட்டங்களில் கனமழை..!

You May Like