2 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ஆர்ச்சர்…. 9 சிக்ஸர்கள் அடித்த சஞ்சு சாம்சன்…. மாஸ் காட்டியா ராஜஸ்தான்… அம்பத்தி ராயுடு விலகல்…தோனி கூறிய காரணம்! ஐபிஎல் கிரிக்கெட் போட்டி…சென்னை அணிக்கு 217 ரன்கள் இலக்கு! 4வது லீக் ஆட்டம்….காயம் காரணமாக அம்பத்தி ராயுடு விலகல்! 4வது லீக் ஆட்டம்…சென்னை அணி பந்துவீச்சு தேர்வு! ரெய்னா, தினேஷ் கார்த்திக் சாதனைகளை முறியடிப்பாரா தல தோனி? சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல்..! ஏற்கனவே வாய்க்கா தகராறு.. இப்போ இது வேறயா?.. கொஞ்சமா நெஞ்சாமா… குடித்துவிட்டு இன்ஸ்பெக்டர் செய்யும் அராஜகம்! குட்நியூஸ்..!! அதிரடியாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. Record Break..!! சிஎஸ்கே vs மும்பை இடையிலான முதல் ஐபிஎல் போட்டியை எத்தனை கோடி பேர் பார்த்தனர் தெரியுமா..? நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு அவரு என் மேல கோவமா இருக்காரு?.. அதிமுக எம்பி காட்டம்..! குடும்ப உறுப்பினர்களால் அதிகளவில் பெண்கள் கற்பழிக்கப்படுகின்றனர்…பாக்., நாடாளுமன்ற உறுப்பினர் பரபரப்பு பேச்சு! கொரோனாவை விட கடுமையான புதிய பாக்டீரியா தொற்று.. சீனாவில் பரவுவதால் இந்தியாவிற்கு என்ன ஆபத்து..? திருமணம் ஆனதை மறைத்து வேறொரு திருமணம் செய்பவர்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?… முதல்வர் இல்லாத நேரத்தில் கெத்து காட்டிய ஓபிஎஸ்..! கட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை நடத்தியது இதற்குதான்..!

#BreakingNews : தமிழகத்தில் இன்றும் புதிய உச்சம்.. ஒரே நாளில் 3,645 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3, 645 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 74,000-ஐ கடந்துள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. எனவே, இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லிக்கு அடுத்தபடியாக, அதிகம் கொரோனா பாதித்த மாநிலங்களில் தமிழகம் 3-வது இடத்தில் உள்ளது. கடந்த சில நாட்களாகவே, 2,500-க்கும் அதிகமானோருக்கு வைரஸ் கண்டறியப்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்நிலையில் 2வது நாளாக இன்றும் 3,500 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழகத்தில் இன்று புதிதாக 3,645 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 74,622- ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 1,957 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49,607-ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் 1,688 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 432 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு 4,651-ஆக அதிகரித்துள்ளது. மதுரையில் ஒரே நாளில்194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு 1,477-ஆக உயர்ந்துள்ளது. இதே போல் வேலூரில் இன்று மட்டும் 149 பேருக்கு பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு 901-ஆக அதிகரித்துள்ளது. கோவையில் 43 பேருக்கு கொரோனா உறுதியானதால், மொத்தம் 393 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளதால் கொரோனா பலி எண்ணிக்கை 957-ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,358 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதால், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 41,357-ஆக உயர்ந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

“சஸ்பெண்ட், பணியிடமாற்றம், காத்திருப்பு பட்டியல் என்பது வெறும் கண்துடைப்பே..” சாத்தான்குளம் கொடூரம் குறித்து உதயநிதி ட்வீட்..

Fri Jun 26 , 2020
சாத்தான்குளம் கொடூரம் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். சாத்தான்குளத்தில் கடந்த 19-ம் தேதி, ஊரடங்கை மீறி கடையை கூடுதல் நேரம் திறந்து வைத்தற்காக கூறி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து மர்மமான உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் கொடூர தாக்குதல் […]
சஸ்பெண்ட்

You May Like