சென்னையில் பெட்ரோல் டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. கச்சா விலையில் ஏற்படும் மாற்றத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையிலும் தினந்தோறும் மாற்றம் செய்யும் முறையை எண்ணெய் நிறுவனங்கள் பின்பற்றி வருகின்றன,
இந்நிலையில் நாடு முழுவதும் அமலில் உள்ள கொரோனா ஊரடங்கு காரணமாக, சாலைப் போக்குவரத்து வெகுவாக குறைந்தது. தற்போது ஊரடங்கை மத்திய மாநில அரசுகள் தளர்த்தியுள்ளதால் போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மாற்றமின்றி தொடர்ந்த பெட்ரோல் டீசல் விலை, நேற்று முன் தினம் விலை உயரத் தொடங்கியது.

இந்நிலையில் 3-வது நாளாக இன்று பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 48 காசுகள் அதிகரித்து ரூ.77.08-க்கும், டீசல் 49 காசுகள் அதிகரித்து ரூ.69.74-க்கும் விற்பனையாகிறது.