சென்னை கோயம்பேடு மார்கெட்டில் ஏற்பட்ட கொரோனா தொற்றால் காய்கறி விற்பனை தற்காலிகமாக குறைந்த அளவு விற்பனையாளர்களுடன் திருமழிசை மார்க்கெட் காய்கறிகளை விற்பனை செய்து வருகிறது.

உணவு பொருட்களை நெடுநாட்கள் சேமித்து வைக்கமுடியாது என்பதாலும் சுபநிகழ்சிகள் கட்டுபாடுகளுடன் நடந்தாலும் காய்கறிகளின் விற்பனை குறைந்தது. பல்வேறு திருமண நிகழ்ச்சிகள் தடைப்படிருந்தது. உணவங்களும் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
பொருளாதார பின்னடைவை கருத்தில் கொண்டு அரசு சில கட்டுபாடுகளுடன் தொழில்கள் செய்ய அனுமதித்துள்ளது. இதனால் சென்னை திருமழிசை மார்க்கெட்டில் பொது மக்கள் தங்கள் தேவைகளுக்கு ஏற்ப காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஸ்டிரா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டன் காய்கறிகள் வருவதால் அவற்றின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது
இன்றைய நிலவரப்படி திருமழிசை மார்க்கெடில் காய்கறிகள் விலை நிலவரம்
(ஒரு கிலோ)
பெரிய வெங்காயம் – ரூ.10
சாம்பார் வெங்காயம் – ரூ.50
தக்காளி – ரூ.10
கேரட் – ரூ.15
பீட்ரூட் – ரூ.15
உருளைக்கிழங்கு – ரூ.25
இஞ்சி – ரூ.50
பூண்டு – ரூ.120
பச்சைமிளகாய் – ரூ.25
அவரைக்காய் – ரூ.40
பீன்ஸ் – ரூ.50
சேனைக்கிழங்கு – ரூ.20
காளிப்ளவர் – ரூ.15
முங்கைக்காய் – ரூ.15
வெண்டைக்காய் – ரூ.15
கத்தரிக்காய் – ரூ.20
கோஸ் – ரூ. 10
முள்ளங்கி – ரூ.15
சவ்சவ் – ரூ.10