தமிழகத்தில் நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை.. இந்த மாவட்டத்தில் மட்டும் தான்…

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் நாகை மாவட்டம், நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

நாகை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ நாகை மாவட்டம், நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயிலில் பிரமோற்சவ திருவிழா நடைபெற்று வருகிறது.. அதன் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது.. இந்த தேரோட்டத்தை முன்னிட்டு நாகை நகரம் மற்றும் வட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது..” என்று தெரிவித்துள்ளார்..

.

Maha

Next Post

#Rain: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை...!

Mon Jul 11 , 2022
தமிழகத்தில் வரும் 14ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் […]

You May Like