மொத்தம் 14 நாட்கள்..!! பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜிபி முத்து வெளியேறிய நிலையில், அவரின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து, பாடகர் அசல் கோலார், ராபர்ட் மாஸ்டர், திருநங்கை ஷிவின் கணேசன் , சாந்தி அரவிந்த், சீரியல் நடிகர் முகம்மது அஸீம், சீரியல் நடிகை ஆயிஷா, ஷெரின் ஷாம், மணிகண்ட ராஜேஷ், சரவணன் மீனாட்சி ரக்‌ஷிதா, ராம் ராமசாமி, பாடகர் தினேஷ் கனகரத்தினம் , விஜே மகேஸ்வரி, அமுதவாணன், நடனக் கலைஞர் மணிச்சந்திரா, விஜே கதிரவன், நடிகை குயின்ஸி, சிங்கப்பூர் மாடல் நிவாசினி, டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, விசிக மாநில செய்தி தொடர்பாளர் விக்ரமன் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை மைனா நந்தினி உள்ளே வந்துள்ளார்.

மொத்தம் 14 நாட்கள்..!! பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜிபி முத்துவுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதற்கிடையே ஜிபி முத்து, தான் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததால், அவரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர் வெளியே செல்ல அனுமதிப்பதாக கமல்ஹாசன் தெரிவித்தார். அதன்படி, பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் நபராக அவர் வெளியேறினார். இந்நிலையில், அக்டோபர் 9ஆம் தேதி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து அந்த பிரம்மாண்ட வீட்டில் 14 நாட்கள் இருந்துள்ளார். அதற்காக அவர் மொத்தமாக ரூ. 2 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Chella

Next Post

தீபாவளி திருநாளில் 2-வது குழந்தைக்கு தந்தையானார் யோகிபாபு..!! திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து..!!

Mon Oct 24 , 2022
நகைச்சுவை நடிகர் யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. திரைத்துறையினர் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர், கதாநாயகன், குணச்சித்திர நடிகர் என அனைத்து கதாபாத்திரங்களிலும் கால்பதித்தவர் நடிகர் யோகிபாபு. இவருக்கும் மஞ்சு பார்கவி என்பவருக்கும் கடந்த 2020ஆம் ஆண்டு எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. கடந்த ஆண்டு யோகிபாபு-மஞ்சு பார்கவி தம்பதியருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. சமீபத்தில், அந்த குழந்தையின் முதலாம் […]
தீபாவளி திருநாளில் 2-வது குழந்தைக்கு தந்தையானார் யோகிபாபு..!! திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து..!!

You May Like