கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

சென்னையில் நாளை, நாளை மறுநாள் போக்குவரத்து மாற்றம்

சீன அதிபர் ஜின் பிங் வருகையை முன்னிட்டு, நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை தெரிவித்துள்ளது.

519395

இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஜி.எஸ்.டி சாலை (சென்னை விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணா சாலை (கத்திபாரா முதல் சின்ன மலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து அதிகரித்து போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே மேற்கண்ட சாலைகளில் அமைந்துள்ள கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் மாற்று வழியை தேர்வு செய்து கொள்ள அறிவுறுத்தபட்டுள்ளனர்.

மேலும் கனரக வாகனங்கள், சரக்கு வாகனங்கள், இலகுரக சரக்கு வாகனங்கள், டேங்கர் லாரிகள் போன்ற வாகனங்கள் 11.10.2019 அன்று காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மற்றும் 12.10.2019 அன்று காலை காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மேற்படி சாலைகளில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சீன அதிபரின் சாலை வழி பயணத்தின் போது கீழ்கண்ட போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன.

  • 11.10.2019 அன்று, 12.30 மணி முதல் 14.00 மணி வரை, பெருங்களத்தூரிலிருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் ஜி, எஸ்.டி சாலை நோக்கி அனுமதிக்கப்படாமல் “0” பாயின்ட் சந்திப்பிலிருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக திருப்பிவிடப்படும்.
  • சென்னை தென்பகுதியிலிருந்து வடக்கு பகுதிகளுக்கு வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் ரோடு வழியாக , குரோம்பேட்டை – தாம்பரம் வழியாக மதுரவாயல் புறவழிச்சாலையை பயன்படுத்தி செல்லலாம்.
  • மேலும் தாம்பரம் மற்றும் குரோம்பேட்டை பகுதிகளிலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் பல்லாவரம் ரேடியல் சாலையை பயன்படுத்திக்கொள்ளலாம்
  • 11.10.2019 அன்று, 15.30 மணி முதல் 16.30 மணி வரை ஜி, எஸ்.டி சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் கத்திப்பாரா சந்திப்பிலிருந்து கிண்டி நோக்கி அனுமதிக்கப்படாமல், 100 அடி சாலை வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.
  • 11.10.2019 அன்று, 14.00 மணி முதல் 21.00 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும். மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.
  • 12.10.2019 அன்று, 07.30 மணி முதல் 14.00 மணி வரை, ராஜீவ் காந்தி சாலையில் (OMR) நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சோழிங்கநல்லூர் சந்திப்பில் பெரும்பாக்கம் வழியாக செல்ல திருப்பிவிடப்படும்.
  • மேலும் 12.10.2019 அன்று, 07.00 மணி முதல் 13.30 மணி வரை கிழக்கு கடற்கரை சாலையில் வரும் அனைத்து வாகனங்களும் அக்கரை சந்திப்பில் முட்டுக்காடு நோக்கி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என்றும், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

1newsnationuser2

Next Post

திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற பாக் சவாரி உற்சவம்

Thu Oct 10 , 2019
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பாக் சவாரி உற்சவம் விமரிசையாக நநடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, பெருமாளின் மாலையை அனந்தாழ்வாருடைய அவதாரமான மகிழ மரத்துக்கு சாத்துவது வழக்கம். கடந்த 30 ஆம் தேதி இந்த ஆண்டின் பிரம்மோற்சவம் தொடங்கி 8 ஆம் தேதி சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று அனந்தாழ்வார் நந்தவனத்தில் பாக் சவாரி உற்சவம் நடைபெற்றது. உற்சவர் மலையப்பசாமியை அனந்தாழ்வார் தோட்டத்துக்குக் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அங்கு வைத்து […]
3ab222a2 26d9 4b4f 8595 484f2bd9ffc2

You May Like