ஆந்திராவில் பரிதாபம்: எண்ணெய் தொழிற்சாலையின் விதிமீறல்களால் 7 பேர் மூச்சு திணறி பலி!

ஆந்திர மாநிலத்தில் எண்ணெய் ஆலையை சுத்திகரிக்கச் சென்ற ஏழு பேர் மூச்சு திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும்  பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள  பெத்தபுரம் மண்டலத்தில் ஜி ராகம்பேட்டா  என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அம்பட்டி சுப்பண்ணா  என்ற எண்ணெய் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் இயங்கி வரும் ஒரு எண்ணெய் டேங்கில் மட்டும்  கடந்த இரண்டு நாட்களாக எண்ணெய் சேமிக்கப்படாமல் காலியாக இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த டேங்கை சுத்தம் செய்ய  ஆட்களை கொண்டுவர முயற்சி செய்திருக்கின்றனர். ஆனால் வெளியில் இருந்து ஆட்கள் யாரும் இப்படிக்கு வரவில்லை. இதனைத் தொடர்ந்து  தொழிற்சாலையில் வேலை செய்யும் ஆட்களை கொண்டே சுத்தம் செய்ய முடிவு செய்துள்ளது நிர்வாகம். அதன்படி காலை 9 மணி அளவில் சுத்தம் செய்வதற்கான பணியை தொடங்கி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து வெச்சாங்கி கிருஷ்ணா என்ற தொழிலாளி ஏணியை வைத்து  டேங்கை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கி இருக்கிறார். ஆனால் நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. இதனையடுத்து உள்ளே சென்ற நபர் ஏன் இன்னும் வெளியே வரவில்லை என பதறிய நிர்வாகம் வெச்சாங்கி நரசிம்மம் என்ற மற்றொரு தொழிலாளியை உள்ளே அனுப்பி இருக்கிறது. அந்த நபரும் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

இதனால் பதறிய நிர்வாகம் அடுத்தடுத்து ஆட்களை உள்ளே அனுப்பிக்கொண்டே இருந்திருக்கிறது. கடைசியாக உள்ளே இறக்கிய தொழிலாளி மட்டும்  மூச்சு திணறி வெளியே வந்திருக்கிறார். இதனை அடுத்து அவருக்கு முதலுதவி அளித்த சக தொழிலாளர்கள்  உள்ளே சென்ற மற்ற நபர்களுக்கு என்ன ஆனது என விபரம் கேட்டுள்ளனர். உள்ளே சென்ற அனைத்து தொழிலாளர்களும் மயக்க நிலையில் இருப்பதாக இவர் தெரிவித்திருக்கிறார். மேலும் தனக்கு உள்ளே இறங்கிய போது மூச்சுத் திணறியதால்  தான் உடனடியாக வெளியேறி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறைக்கு இது தொடர்பாக புகார் அளித்துள்ளது தொழிற்சாலை நிர்வாகம்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயணைப்பு  துறையின் உதவியுடன்  எண்ணெய் டாங்கிற்குள் மயக்க நிலையில் இருந்தவர்களையும் மீட்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்தபோது அனைவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இறந்தவர்கள் கர்ரி ராமராவ்.பிரசாத்.கட்டமுரி ஜெகதீஷ்.கர்ரி ராமராவ்,வெச்சாங்கி சாகர்,வெச்சாங்கி நரசிம்மம்.வெச்சாங்கி கிருஷ்ணா.கொரத்தாடு பாஞ்சி பாபு  ஆகியோர் ஆவர். இவர்கள் அனைவரும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் புதிதாக தொழிற்சாலையில்  பணியமர்த்தப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. இதில் ஐந்து பேர் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தின் படேருவைச் சேர்ந்தவர்கள்  மீதமுள்ள இரண்டு பேர்  புலிமேடு கிராமத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். மேலும் இந்த தொழிற்சாலையானது  தொழிற்சாலை பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு  கட்டப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும் இச்சம்பவத்தில்  இறந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான்  என்ன காரணம் என தெரிய வரும்  என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. முதல் கட்ட தகவல் அறிக்கையின் படி தொழிலாளர்கள் மூச்சுத் திணறலால் இறந்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது.

Baskar

Next Post

நடுவழியில் இறந்த மனைவி.. சடலத்துடன் நடந்த கணவர்!  நடந்தது என்ன ?

Thu Feb 9 , 2023
விசாகப்பட்டினத்தில் மொழி தெரியாததால் வடமாநிலத்தைச் சார்ந்த ஒருவர்  தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தபடி  உதவி கேட்டு தெரிந்த சம்பவம் பெரும் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கோராபுத் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் சமுலு மற்றும் ஈது குரு. கணவன் மனைவியான இவர்கள் வேலை தேடி விசாகப்பட்டினம் வந்துள்ளனர். இங்கு வந்த இடத்தில் அவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால் விசாகப்பட்டினத்தில் உள்ள மருத்துவமனையில் தனது மனைவியை சிகிச்சைக்காக சேர்த்து இருக்கிறார். இந்நிலையில் […]

You May Like