சென்னை பேருந்து போக்குவரத்தில் அதிரடி மாற்றம்…..! போக்குவரத்து துறை வெளியிட்ட சுற்றறிக்கை…..!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தலைநகரம் சென்னைக்கு புறப்படும் பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக சென்னைக்குள் நுழைந்தால் அதிக நேரம் மிச்சம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.

தற்சமயம் வெளியூர்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் கோயம்பேடுக்கு வந்து தாம்பரம், கிண்டி உள்ளிட்ட பகுதிகளின் வழியாகவும் அல்லது பெருங்களத்தூர் மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளின் வழியாகவும் செல்கின்றன.

தாம்பரம் வழியாக சென்னைக்குள் பேருந்துகள் வந்தால் நேர குறைவு ஏற்படும் ஆனால் போக்குவரத்து நெரிசலை காரணமாக காட்டி தாம்பரம் வழியை புறக்கணித்து மதுரவாயில் சாலையை பேருந்து ஓட்டுநர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆகவே நேரம் குறைவு தான் ஆனாலும் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், கிண்டி, அசோக் பில்லர், வடபழனி போன்ற பகுதிகளில் இறங்க வேண்டிய பயணிகள் நேரடியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

அதுவே தாம்பரம் வழி என்றால் நேரடியாகவே அந்தந்த பகுதிகளில் இறங்கிக் கொள்ளலாம் இந்த பிரச்சனைக்கு தற்சமயம் போக்குவரத்து துறை ஒரு தீர்வை கண்டுள்ளது. அதாவது இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ள போக்குவரத்து துறை சென்னை நோக்கி வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் தாம்பரம் வழியாக இயங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

அந்த சுற்றறிக்கையில், சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் தாம்பரத்தை கடந்து சென்னை வந்தடையும் பேருந்துகள் எல்லாம் தாம்பரம் வழியாக இயங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தாம்பரம் மாநகர பேருந்து நிலைய ஷெட்டுக்கு இடது புறமாக நிறுத்தி பயணிகளை இறக்கி விட ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

இதன் மூலமாக தாம்பரம் குரோம்பேட்டை வடபழனி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் பயன்பெறுவார்கள். அரசு போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும் மாலை 5 மணிக்கு மேல் பெருங்களத்தூர் வழியாக சென்னை வரும் பேருந்துகள் மட்டும் மதுரவாயில் சுங்கச்சாவடி மூலமாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு ஏற்றப்படலாம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சுற்றறிக்கை அனைத்து கிளை மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டு இருக்கிறது.

Next Post

காதலியின் அக்காவுடன் சேர்ந்து 10 சவரன் நகையை திருடிய காதலன்..!! சிக்கியது எப்படி..?

Fri Feb 17 , 2023
மதுரை மாவட்டம் மேலமாசி வீதி பகுதியில் பிரபல நகைக்கடையான பீமா ஜூவல்லர்ஸ் இயங்கி வருகிறது. இந்த கடையின் கீழ்த்தளத்தில் கடந்த 13ஆம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல கடையை திறந்து, நகைகளை சரிபார்த்த போது மொத்த நகையில் 10 சவரன் குறைந்தது தெரியவந்தது. இதனால், பதறிப்போன ஊழியர்கள், மீண்டும் ஒருமுறை சோதனை செய்தனர். இதில், 10 சவரன் மதிப்பிலான செயின் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கடையின் […]

You May Like