“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

திருச்சி: நாட்டு வெடிகுண்டைபோண்டா என கடித்த 6 வயது சிறுவன்..தலை சிதறிய கொடூரம்

திருச்சி அருகே மீன் பிடிக்க பயன்படும் நாட்டு வெடிகுண்டை, போண்டா என நினைத்து கடித்த 6 வயது சிறுவன் தலைசிதறி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

child death vishnu dev

தொட்டியம் அடுத்த அலகரை கிராமத்தை சேர்ந்தவர் கங்காதரன், இவர் பாப்பாபட்டி பகுதியில் உள்ள குவாரியில் செல்வக்குமாரிடம் பாறையை உடைக்க பயன்படுத்தும் 3 நாட்டு வெடிகுண்டுகளை வாங்கி வந்துள்ளார். இதையடுத்து அவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து மணமேடு பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் வெடிகளை வீசி, அந்த அதிர்வில் செத்து மிதக்கும் மீன்களை சேகரித்துள்ளனர்.

2 வெடி குண்டுகள் பயன்படுத்தப்பட்ட நிலையில் தேவையான மீன்கள் கிடைத்து விட்டதால் அருகில் உள்ள உறவினரான பூபதியின் வீட்டுக்கு மீன்களுடன் வந்துள்ளனர். அப்போது பயன்படுத்தாத ஒரு வெடிகுண்டை வீட்டின் கட்டிலில் வைத்து விட்டு மூவரும் மீனை சமைப்பதற்கு, கழுவி சுத்தம் செய்வதற்காக வீட்டின் பின்பக்கத்திற்கு சென்றுள்ளனர்.

images 29

அப்போது அங்கு வந்த பூபதியின் 6 வயது மகன் விஷ்ணு தேவ், கட்டிலில் இருந்த வெடிகுண்டை போண்டா என நினைத்து எடுத்து கடித்துள்ளான். அடுத்த நொடி பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் சிறுவன் விஷ்ணு தேவ் தலை சிதறி பலியாகி உள்ளான். சப்தம் கேட்டு வந்த அவர்கள் சிறுவன் விஷ்ணு தேவின் சடலத்தை வெளியாட்களுக்கு தெரியாமல் அருகில் உள்ள இடுகாட்டிற்கு எடுத்துச்சென்று ரகசியமாக தகனம் செய்துள்ளனர்.

இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரியவந்ததையடுத்து வெடிகுண்டு வாங்கி வந்த கங்காதரன், மோகன்ராஜ், குவாரியில் வெடிகுண்டு விற்ற செல்வகுமார் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

1newsnationuser4

Next Post

டிக்டாக் ஆப்பிற்கு ஆப்பு வைத்த சிங்காரி.... ' மேட் இன் இந்தியா'

Thu Jun 11 , 2020
‘சிங்காரி’ என்ற இந்தியாவில் உருவாக்கப்பட்ட செயலியை தற்போது வரை ஒரு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். சீனாவின் டிக்டாக் செயலி பலரையும் அடிமையாக்கி வைத்திருந்தது. சிறியவர்கள் முதல் வயதானோர் வரை தங்கள் திறமைகளை காட்ட இந்த செயலியை மணிக்கணக்காக பயன்படுத்தி வந்தனர். இருப்பினும் தற்போது ஏற்பட்டுள்ள இந்தியா சீனாக்கு இடையிலான மோதல் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையில் பெங்களூரை சேர்ந்த புரோக்ராம் வடிவமைப்பாளர்கள் பிஸ்வத்மா நாயக் […]
Chingari 1591784680852 1591784698386

You May Like