உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை காட்டுக்குள் வீசியெறிந்த அவலம்.. அதிர்ச்சி வீடியோ..

திருச்சியில் கொரோனா நோயாளியின் சடலத்தை காட்டுக்குள் வீசியெறிந்த அவலம் அரங்கேறியுள்ளது.

திருச்சியில்

நாட்டின் பல மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் மிருகங்களை விட மோசமாக நடத்தப்படுகின்றனர் என்று குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. மேலும் கொரோனா காரணமாக உயிரிழந்தவர்ளின் உடல்கள் குப்பைத் தொட்டியில் வீசப்படும் அவலமும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. இதுகுறித்து உச்சநீதிமன்றமும் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. இந்நிலையில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் திருச்சியில் அரங்கேறி உள்ளது.

திருச்சியில் தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் இருந்து, உயிரிழந்தவரின் சடலம் காட்டுக்குள் உள்ள முட்புதரில் தூக்கி வீசப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தனியார் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்ஸில், இறங்கும் 3 பேர், ஒருவரின் சடலத்தை முட்புதருக்குள் வீசும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது. எனினும் அவர் கொரோனா நோயாளியா அல்லது வேறு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது தெரியவில்லை. அந்த மூவரில் ஒரு முழு பாதுகாப்பு கவச உடையை அணிந்திருப்பதால், அவர் கொரோனா நோயாளி என்பது உறுதியாகிறது.

இதனிடையே இந்த செய்தி வெளியானவுடன், மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 73 முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு, முதியவரின் சடலத்தை எரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிலர் அந்த வீடியோவை தவறாக சித்தரித்து பதிவிட்டு வருகின்றனர் எனவும் விளக்கம் அளித்துள்ளது.

1newsnationuser1

Next Post

விழுப்புரம்: பிராமணர் உயிர் பறித்த கொரோனா..கரம் கொடுத்த இஸ்லாமிய நண்பர்கள்

Thu Jun 25 , 2020
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்த பிராமணர் உடலை அடக்கம் செய்ய யாரும் முன்வராத நிலையில், இஸ்லாமியர்கள் சிலர் முன்வந்து பிராமண முறைப்படி உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர். ஜூன் 23ம் தேதி காலை விழுப்புரம் மாவட்டம் பெரம்பை பகுதியில் பிராமணர் ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அதேசமயம், அவரின் குடும்பத்தினரும் கொரோனாவால் பாதிக்கப்டிருந்ததால், அவர்கள் தனிமைப்படுக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக இறுதி சடங்கு செய்ய நண்பர்கள், உறவினர்கள், […]
n1935639429b4c9d237dacbb7c37eb189ebe986326046959bffb265daca8a28b0a2c5cb475 1

You May Like