பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி..! ஒரே ஒரு மெசேஜால் டேமேஜ் ஆன பெண்கள்..! புதிய கூகுள் பே செயலிக்கு பணம் செலுத்த வேண்டும் – கூகுள் விளக்கம் கூகிள் பே யூஸ் பண்றீங்களா! கவனம் இந்த பதிவு உங்களுக்கு தான்… என்னைய ஒன்னும் செய்ய முடியாது..! ஏன்னா நான் பாஜகவுல இருக்கேன்..! பாலியல் வழக்கில் சிக்கிய புரோக்கரின் பகிரங்க மிரட்டல்..! கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி

உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியல்…கால் வெந்துபோன பரிதாப சம்பவம்…

திருச்சி தனியார் உடற்பயிற்சி கூடத்தில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோன பரிதாப சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

WhatsApp Image 2020 03 16 at 7

திருச்சி கேகே நகர், கோவர்தன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ்குமார்-சாவித்திரி தம்பதியின் மூத்த மகன் ராகவன் (22), இவர் திருச்சி பாஸ்போர்ட் அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் ஃபிட்னஸ் என்ற பெயரில் இயங்கிவரும் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் கடந்த 24 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு நீராவி குளியலுக்காக சென்றார். இங்கு திருச்சி நகரைச் சேர்ந்த காவல்துறை அலுவலர்கள், தொழிலதிபர்கள் என பலரும் உடற்பயிற்சி, நீராவி குளியல், மசாஜ் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த பயிற்சி கூடத்தில் ராகவனும் நீராவி குளியலுக்காக வாடிக்கையாக சென்று வந்துள்ளார்.

WhatsApp Image 2020 03 16 at 7 1

இந்த பயிற்சி கூடத்தில் நீராவிக் குளியல் அறை ஒரு கழிவறை போல் அமைக்கப்பட்டு, நீராவி அளவு மற்றும் நேர கட்டுப்பாட்டுக்கு ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே கதவை சாத்திவிட்டு நீராவி குளியலில் ஈடுபட்டிருந்த ராகவனுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால், சுதாரித்துக்கொண்டு கதவை தட்டியுள்ளார். ஆனால் யாரும் கதவைத் திறக்கவில்லை. இதனால், ராகவன் நீராவி குளியல் அறை உள்ளேயே மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.ரத்தம் கொட்டிய நிலையில், நீராவி வெளியேறி கீழே விழுந்த ராகவனின் காலில் பட்டதால் அவரது ஒரு கால் முற்றிலும் நீராவி வெப்பத்தால் வெந்துள்ளது.

ரத்தக்கசிவு கதவு வழியாக வெளியே வந்ததைப் பார்த்த ஊழியர்கள் உடனடியாக ஓடிச்சென்று கதவை திறந்து பார்த்தனர். இதனையடுத்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராகவனை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஜிம்மில் நீராவி குளியலில் ஈடுபட்ட இளைஞரின் கால் வெந்துபோனதால், அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு காலில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மூன்று நாள்கள் கோமா நிலையிலும், அதைத் தொடர்ந்து 6 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

WhatsApp Image 2020 03 16 at 7 1 1

இதுகுறித்து ராகவனின் பெற்றோர் உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று நியாயம் கேட்டனர். சிகிச்சைக்கு ஆகும் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்துள்ள நிலையில், தற்போது வரை சிகிச்சைக்கான செலவு தொகையை வழங்காமலும், பெற்றோரையும் உடற்பயிற்சி கூட நிர்வாகம் மிரட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தில்லைநகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்ட விசாரணையில் உடற்பயிற்சி கூடத்தில் எவ்வித பாதுகாப்பு அம்சங்களும், வழிகாட்டி நெறிமுறைகளும் இல்லாதது தெரியவந்தது.

மேலும் நீராவியில் ரசாயனம் எதுவும் கலந்துள்ளதால் ராகவன் மயக்கமடைந்தாரா, என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், அதிக வெப்பம் காரணமாக ராகவனுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

1newsnationuser2

Next Post

260 கிராம் தங்கம் பறிமுதல்...அதிகாரிகள் விசாரணை...

Mon Mar 16 , 2020
திருச்சி விமான நிலையத்தில், பயணிகளை சோதனை செய்ததில், புதுகோட்டையை சேர்ந்த நபரிடம், 260 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி விமான நிலையத்தில், தொடர்ச்சியாக தங்கம் கடத்தல், போதைபொருள் என கடத்தி வந்த வண்ணமாக உள்ளது. அதிகாரிகளும் பறிமுதல் செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனினும் இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. மேலும், கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து பயணிகளையும் சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி […]
trichy-airport-gold Confiscated

You May Like