திருச்சியில் கட்டிய மனைவியை நெருங்கிய நண்பனின் இச்சைக்கு அடிபணிய வைத்து கொடுமை செய்த கணவன் மற்றும் அவனது நண்பன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கே.கே.நகரைச் சேர்ந்தவர் முகமது அஸ்லம். இவருக்கு மனைவியும் 2 பெண் பிள்ளைகளும் உள்ளனர். அவ்வப்போது இவர்களது வீட்டிற்குச் செல்லும் கணவரின் நெருங்கிய நண்பரும், மத போதகருமான முகமது பாரூக் என்பவர், முகமது அஸ்லமின் மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்து, ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு கணவர் முகமது அஸ்லமும் உடந்தை என்பதால் தனது மனைவி பல முறை தெரிவித்தும் நண்பனின் செயலை அவர் கொண்டுகொள்ளவில்லை என தெரிகிறது.

இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாருக், பர்வீனுக்கு சொந்தமான 25 பவுன் நகை மற்றும் ரொக்கத்தை களவாடியுள்ளார். இதுதொடர்பாக, பர்வின் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் கணவந்மனைவிக்கு அறிவுரை வழங்கி ஒற்றுமையாக இருக்குமாறு கூறி அனுப்பியுள்ளனர்.
இந்தச் சூழ்நிலையில் பாரூக்கின் பார்வை அஸ்லம் –பர்வீன் தம்பதிகளின் மகள்களிடம் சென்றாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பர்வீன் அளித்த புகாரின்பேரில், மூன்று பிரிவுகளின் கீழ் முஹம்மது பாரூக் மற்றும் முகமது அஸ்லாம் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.