அது துரதிர்ஷ்டவசமானது…ருதுராஜுக்கு வாய்ப்பு வழங்காததற்கு இதுதான் காரணம்…தோனி விளக்கம்! சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா?

திருச்சி நகைக்கடை கொள்ளை – முக்கிய குற்றவாளியின் அண்ணன் மகன் கைது

திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியான முருகனின் அண்ணன் மகன் முரளியை தனிப்படை போலீசாரல் கைது செய்தனர்.

Theft

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளையில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம், பிளாட்டினம், வைரம் ஆகிய நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடையவர்களை பிடிக்க, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மடப்புரம் பாலம் அருகே இரவு நேர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை போலீசார் சோதனைக்காக நிறுத்திய போது, ஒருவர் தப்பியோடினார். போலீசாரிடம் சிக்கிய மற்றொருவரை சோதனை செய்த போது, அவரிடம் இருந்து லலிதா ஜூவல்லரி பார்கோடு கொண்ட 5 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Theft1

இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில், பிடிபட்ட நபர் திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பியோடியவர் சீராத்தோப்பைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு முருகன் என்ற நபர் மூளையாக செயல்பட்டதும், அவர் தான் முக்கிய குற்றவாளி என்பதும் தெரியவந்தது.

எனவே முருகன் மற்றும் தப்பியோடிய சுரேஷை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் சுரேஷின் தாய் கனகவள்ளியைக் கைது செய்த போலீசார், அவரையும் மணிகண்டனையும் திருச்சி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Theft 3

இந்த கொள்ளையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான முருகனை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவரது அண்ணன் மகனான முரளியை போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். முரளியிடம் நடத்தப்பட உள்ள விசாரணையில் முருகன் எங்கு தலைமறைவாக இருக்கிறார், கொள்ளை சம்பவத்தின் பின்னணி உள்ளிட்ட தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1newsnationuser2

Next Post

போதை மாத்திரையான புற்று நோய் மாத்திரை - 6 பேர் கைது

Sun Oct 6 , 2019
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் புற்றுநோய் சிகிச்சைக்கான மாத்திரையை போதை மாத்திரையாக விற்பனை செய்த கும்பல் கைது செய்யப்பட்டது. அரசர்குளம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற போலீசார் சந்தேகத்திற்குரிய நபரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்க ஆரம்பித்தன. அதனடிப்படையில் அருகேயுள்ள மற்றொரு இடத்தில் திடீர் சோதனையில் இறங்கிய போலீசார், அங்கு புற்றுநோய்க்கான மத்திரைகள் போதை மாத்திரைகளாக […]
Dkn Tamil News 2019 Oct 03  49572169780732

You May Like