கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

திருச்சி நகைக்கடை கொள்ளையில் திடீர் திருப்பம் – வாகன சோதனையில் சிக்கிய நபரிடம் 5 கிலோ நகைகள் மீட்பு

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் திருவாரூவ மாவட்டத்தைச் சேர்ந்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 5 கிலோ தங்கநகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

images

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜூவல்லரியில் கடந்த புதன் கிழமை இரவு சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் இருவர், அங்கு கீழ்தளத்தில் வைக்கப்பட்டிருந்த சுமார் 13 கோடி மதிப்புள்ள 28 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை சோதனை செய்தனர். அதில் விலங்குகளின் முகத்தைப் போன்ற முகமூடிகளை அணிந்திருந்த கொள்ளையர்கள் இருவர் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் சிலரைப் பிடித்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும் லலிதா ஜூவல்லரியில் நடந்த கொள்ளைச் சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வந்தது.

WhatsApp Image 2019 10 04 at 8.56.17 AM 2

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் மடப்புரம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் இருந்த ஒருவர் ஆற்றங்கரை வழியாக தப்பிச் சென்றுவிட, மற்றொருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் இருந்த பையை சோதனையிட்ட போலீசார், அதில் ஏராளமான தங்கநகைகள் இருப்பதை கண்டுபிடித்தனர் .

நகைகளில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர்களில் இருந்த பார் கோடை வைத்து சோதனையிட்டபோது, அவை லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளுடன் சிக்கிய நபர் மடப்புரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பதும், தப்பி ஓடியது சீராத்தோப்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பதும் தெரியவந்தது. பிடிபட்ட மணிகண்டனிடம் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கொள்ளையன் சிக்கியது குறித்து திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திருச்சி போலீசார் திருவாரூர் சென்று மணிகண்டனை திருச்சிக்கு அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே தப்பி ஓடிய சுரேஷ், பிரபல ஏடிஎம் கொள்ளையன் முருகனின் தம்பி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மீதமுள்ள நகைகளை சீராதோப்பில் உள்ள தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக மணிகண்டன் கூறியதையடுத்து 50க்கும் மேற்பட்ட போலீசார் சீராதோப்பில் முகாமிட்டுள்ளளனர்.மேலும் சுரேஷின் தாய் உட்பட 5 பேரிடம் திருவாரூர் ஆயுதப்படை மைதானத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1newsnationuser2

Next Post

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் இருக்கை - அசத்தும் ரயில்வே

Fri Oct 4 , 2019
பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளால் உருவாக்கப்பட்ட இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை ரயில்வே நிர்வாகம் வேகமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக ரயில்வேயில் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக பிஸ்லரி நிறுவனத்துடன் இணைந்து ரயில் நிலையங்ஜளில் பிளாஸ்டிக் பாட்டிகல்களை சேகரிக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. […]
Recycled Palstic Bench 784x441 1

You May Like