மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

காதலை ஏற்காததால் காதலர்கள் தற்கொலை…போலீசார் விசாரனை…

திருச்சியில் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலி விஷம் குடித்ததை அறிந்து, அவரது காதலனும் தூக்குப்போட்டுதற்கொலை செய்து கொண்டார்.

trichy suicide

திருச்சி புத்தூர் மூலக்கொல்லையை சேர்ந்த அமீர்கானின் மகன் சிராஜ்தீன் (வயது 28). இவர் பெயிண்டராக பணியாற்றி வந்தார். திருச்சி கல்லாங்காடு பகுதியை சேர்ந்த முரளியின் மகள் மேனகா (25). இவர் புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் சிராஜ்தீனுக்கும், மேனகாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் இரு வீட்டின் பெற்றோருக்கும் தெரிய வந்த நிலையில், இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மேனகா கடந்த 27-ந் தேதி வி‌‌ஷம் சாப்பிட்டுள்ளார். உடனடியாக் வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், காதலி வி‌‌ஷம் குடித்த தகவல் அறிந்த சிராஜ்தீன் மனவேதனையில் இருந்து வந்துள்ளார். வழக்கம் போல் வேலைக்கு சென்று பின்னர் வீடு திரும்பிய சிராஜ்தீன் திடீரென இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காதலி வி‌‌ஷத்தை அருந்தியதால் தான் சிராஜ்தீன் தற்கொலை முடிவை எடுத்தது தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேனகாவும், நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாகஉயிரிழந்துள்ளார். காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனா வைராசால் பாதிக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட்..!

Thu Mar 5 , 2020
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜேம்ஸ் பாண்ட் படமான ”நோ டைம் டூ டை” திரைபடத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் உலகின் ஆக்சன் பட வரிசைகளில் முக்கிய திரைப்படமான, ஜேம்ஸ் பாண்ட் திரைபடத்திற்கு என, உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஹாலிவுட்டின் உச்ச நடிகராகவும் கருதப்படுகிறார். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படமான ‛நோ […]
New Project 7

You May Like