"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்து உதவிய காவலர்… மனம் நெகிழிந்து பாராட்டிய வைகோ…

திருச்சி மாவட்டம், மணப்பாறையில், சாலையில் கவலையுடன் நடந்துச் சென்ற கர்ப்பிணிப்பெண்ணின் நிலையை விசாரித்து, ரத்தம் கொடுத்து உயிரை காப்பாற்றிய காவலரின் செயலைக்கண்டு நெகிழ்ந்துப்போய் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன் கைப்பட கடிதம் எழுதி பாராட்டியுள்ளார்.

vaiko police

திருச்சி மாவட்டம்¸ மணப்பாறை காமராஜர் சிலை சோதனைச்சாவடியில் பணியாற்றும் காவலர் சையது அபுதாகீர். இவர் பணியில் இருக்கும்போது, சாலையில் சென்று கொண்டிருந்த நிறைமாத கர்ப்பிணியின் நிலையறிந்து அறுவை சிகிச்சைக்கு தேவைப்படும் இரத்தத்தை தானே முன்வந்து கொடுத்துள்ளார். செய்வதறியாது நின்று கொண்டிருந்த கர்ப்பிணிக்கு, தக்க சமயத்தில் கொடுத்த ரத்தத்தால் சுக பிரசவம் நடந்து அழகான பெண்குழந்தை பிறந்துள்ளது. இந்த நிகழ்வை பத்திரிகையில் படித்த வைகோ, இதுகுறித்து தன் கைப்பட கடிதம் எழுதியும், தொலைபேசியிலும் பாராட்டியுள்ளார்.

அவர் எழுதிய கடிதத்தில், இன்றைய தமிழ் நளேட்டில் வந்த செய்தி என் நெஞ்சில் இன்பச் சிலிர்ப்பினை ஏற்படுத்தியது. மணப்பாறை அருகே உள்ள இரட்டைப்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஏழுமலை என்பவரும், சுலோச்சனா எனும் அவரது நிறைமாத கர்பிணி மனைவியும் பிரசவம் பார்ப்பதற்காக மணப்பாறையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றனர். கர்ப்பிணித் தாய்க்கு இரத்தம் செலுத்த வேண்டிய நிலை.

vaiko letter 1

ஆனால் அந்தப் பெண்ணின் இரத்த வகையைச் சேர்ந்த இரத்தம் அந்த மருத்துவமனையில் இல்லாததால், சிகிச்சை செய்ய முடியாமல் திரும்பினர். வேதனையில் நடந்துகொண்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியில் பணியில் இருந்த காவல்துறை இளைஞர், வளநாட்டைச் சேர்ந்த சையது அபுதாகிர் இந்தத் தம்பதியிடம், “என்ன வருத்தமாகச் செல்கிறீர்கள் என்று கேட்டார்.

அத்தம்பதியினர், நிலைமையை விளக்கினர். அந்தக் கர்ப்பிணித் தாயின் இரத்த வகையும், தன் இரத்தமும் ஒரே வகைதான் என்பதை உணர்ந்த சையது அபுதாகீர் அவர்களை அழைத்துக்கொண்டு அதே மருத்துவமனைக்குச் சென்று இரத்தம் கொடுத்துள்ளார். இதையடுத்து, சுகப்பிரசவம் முடிந்து பெண் குழந்தை பிறந்து. தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

இந்தச் செய்தி அறிந்தபோது, என் உள்ளத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி. “மதம் என்பது மனிதர்களைப் பிரிக்கும் சுவர் அல்ல – மனிதநேயத்தைத் தழைக்கச் செய்யும் மலர்க்கொடி” என உளம் பூரித்தேன். மனிதநேயப் பண்பாளர் சையது அபுதாகிரை அலைபேசியில் தொடர்புகொண்டு இதயம் நிறைய வாழ்த்தினேன். சையது அபுதாகீர் போன்ற மனிதாபிமானச் சிற்பிகளால் மனிதநேயம் தழைப்பது மட்டுமல்ல, அவர் பணியாற்றும் காவல்துறைக்கும் புகழ் மகுடமாகும். அந்த இலட்சிய இளைஞர் வாழ்வாங்கு வாழ்க” என வைகோ வாழ்த்தியுள்ளார்

1newsnationuser2

Next Post

புழல் சிறையில் ஓரினசேர்க்கைக்கு அழைத்ததால் மோதல்... பிளேடால் அறுத்துக்கொண்ட கைதிகள்...

Thu Apr 9 , 2020
புழல் சிறையில் உள்ள கைதிகள் ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் ஏற்பட்ட மோதலில் 2 பேர் ஒருவரை ஒருவர் பிளேடால் அறுத்துக்கொண்டதால் ரத்த வெள்ளத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சென்னையை அடுத்த புழல் தண்டனை சிறையில் 800-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். தற்போது பிளஸ்-2 தேர்வு எழுதுவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கடலூர், வேலூர் உள்ளிட்ட மத்திய சிறையில் இருந்தும் தண்டனை கைதிகள் புழல் சிறைக்கு அழைத்து வரப்பட்டு அடைக்கப்பட்டு உள்ளனர். இதில் […]
conflict-over-gay-marriage-calls Prisoners who cut the blade ...

You May Like