மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்…கொரோனா கண்காணிப்பு மையமாக மாற்றம்…

மக்களை அதிக அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் பரவலாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக திருச்சியில் புதிதாக கட்டப்பட்ட கள்ளிக்குடி மார்க்கெட்டானது தற்போது கொரோனா கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டு உள்ளது.

trichy kallikudi1

உலகில் பல நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, தற்போது இந்தியாவிலும் பரவ தொடங்கி உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிக அளவில் இல்லை. கொரோனா பரவாமல் தடுக்க தமிழக அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கலெக்டா் சிவராசு துரிதமாக செய்து வருகிறார். இதற்காக திருச்சியில் புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வராமல் கிடக்கும் கள்ளிக்குடி மார்க்கெட்டானது கொரோனா கண்காணிப்பு மையமாக மாற்றப்பட்டு உள்ளது.

trichy kallikudi

ஏனெனில் கொரோனா அறிகுறி தென்பட்டால் அவா்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியது அவசியம். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமான பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று கொரோனா தாக்கம் உள்ளதாக தெரியவந்தாலோ, அல்லது மாவட்டத்தில் யாருக்கேனும் தென்பட்டாலோ, அவா்கள் உடனடியாக கள்ளிக்குடி கொரோனா கண்காணிப்பு மையத்திற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அங்கு அவா்கள் 21 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார்கள். 21 நாட்களுக்கு பின்னா் அவா்களுக்கு கொரோனா தாக்கம் இல்லை என்று தெரிய வந்தால் அவா்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள். 21 நாட்களுக்கு பின்னா் அவா்களுக்கு கொரோனா தாக்கம் இருந்தால் அவா்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

trichy ka2

இந்த கொரோனா கண்காணிப்பு மையத்தில் 100 படுக்கை வசதிகள் தற்போது ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு மருத்துவா்கள் மற்றும் 2 செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள் என 20க்கும் மேற்பட்டவா்கள் இங்கு பணியமா்த்தப்பட்டு உள்ளனா். ஒரு வேளை நோயாளிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டால் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் அருகில் உள்ள கல்லூரிகளிலும் இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

1newsnationuser2

Next Post

முதல்வரை புகழ்ந்து தள்ளிய கவிஞர் தாமரை..!

Tue Mar 17 , 2020
தமிழில் படித்தால் முன்னுரிமை என சட்டசபையில் சட்டதிருத்தம் கொண்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கவிஞர் தாமரை பாராட்டியுள்ளார்.   சட்டசபை கூட்டத் தொடரில் பள்ளி, பட்ட மேற்படிப்பை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பில் 20 % இட ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதை அமைச்சர் ஜெயக்குமார் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் கவிஞர் தாமரை […]
sudha

You May Like