"என் வயித்துல அன்பு ஓட குழந்தை வளருது சார்" உண்மையை போட்டுடைத்த ரோஜா…! இன்றும் குறைந்தது தங்கம் விலை.. 3 நாட்களில் இவ்வளவு குறைந்துள்ளதா..? “இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்..

பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை கேட்டதால்… மனைவி குளிக்கும்போது புகைப்படம் எடுத்து மிரட்டிய திருச்சி பிளேபாய் வாக்குமூலம்…

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார் (36). இவர் விராலிமலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் காசாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், தஞ்சையை சேர்ந்த தாட்சர் (32) என்பவருக்கும் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆன அடுத்த சில நாளிலேயே ரீட்டா என்பவரை எட்வின் ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்து உறவுக்கார பெண் எனக்கூறி தங்கவைத்துள்ளார். மேலும் பணி முடிந்து வீட்டிற்கு லேட்டாக வருவதையும், வந்தவுடன் செல்போனில் தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

200 பிட்டு படம்.. வெறித்தனமா அனுபவித்த பேங்க் மேனேஜர்..! செக்ஸ் சைக்கோவின் அதிரவைக்கும் பின்னணி..!

ஒருநாள் எதேச்சையாக ஜெயக்குமாரின் செல்போனை அவரது மனைவி எடுத்து பார்த்துள்ளார். அப்போது, அவருடைய நிர்வாண படங்களும், பெண்களிடம் அவர் நிர்வாணமாக இருப்பது போன்ற படங்களையும் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். பிறகு, ஜெயக்குமார் வேலைக்கு சென்ற பின்பு அவர் பீரோவில் வைத்திருந்த 15க்கும் மேற்பட்ட செல்போன்களை எடுத்து பார்த்துள்ளார். அதில், வங்கிக்கு வரும் பெண்களை விதவிதமாக படமெடுத்து இருப்பதையும், பல பெண்களுடன் அசிங்கமாக வாட்ஸ் அப்பில் சாட்டிங் செய்து இருப்பதையும் கண்டு மிரண்டு போனார்.
பிறகு வாட்ஸ் அப்பில் அசிங்கமாக பேசி சாட்டிங் செய்த சில பெண்களின் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார் ஜெயக்குமாரின் மனைவி தாட்சர்.

அதில் தேவி என்பவரிடம் பேசும்போது, எதுக்கு என் புருஷன் கூட பேசுற, இது அசிங்கம் இல்லையா என்று தாட்சர் கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண், நான் மட்டும் இல்ல, உன் புருஷனோட நிறைய பெண்களுக்கு தொடர்பு இருக்கு. நீ இன்னைக்கு தான் வந்திருக்க. நான் பலமுறை நீ இருக்குற வீட்டுக்கு வந்திருக்கேன். இதை பெரிசு படுத்தாம இருந்தா உனக்கு நல்லது என்று கூறியுள்ளார். பிறகு ஜெயக்குமார் செல்போனில் புவனா என்பவருடன் ஏற்பட்ட தவறான பழக்கத்தால் அவர் கர்ப்பமடைந்த விவரத்தையும், அதை கலைக்க சொல்லி கட்டாயப்படுத்திய தகவல்களையும் வாட்ஸ் அப் சாட்டிங்கில் பார்த்து அதிர்ச்சி அடைந்தார் ஜெயக்குமாரின் மனைவி தாட்சர்.

இதுகுறித்து ஜெயக்குமாரிடம் அவரது மனைவி தாட்சர் கேட்டபோது, “நான் இப்படித்தான் இருப்பேன். அவர்கள் எல்லாம் என்னுடைய தோழிகள். நான் என் இஷ்டத்துக்கு தான் நடப்பேன். இதைப்பற்றி வெளியே யாரிடமும் சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன். நீ குளிக்கும்போது உனக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். என்னைப் பற்றி ஏதாவது பேசினால் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிடுவேன்” என மிரட்டியுள்ளார். ஒரு பக்கம் கணவனின் வக்கிரமான செயல், மற்றொரு பக்கம் வரதட்சணை கொடுமையை சந்தித்து வந்துள்ளார் தாட்சர். இனி இங்கிருந்தால் உயிருக்கு ஆபத்து என்று நினைத்த தாட்சர், அவரது தாய் வீட்டிற்கு தப்பித்து வந்துள்ளார்.

இந்த கொடுமையெல்லாம் அனுபவித்த தாட்சர், தனது பெற்றோருடன் சென்று தஞ்சை டிஐஜி லோகநாதனிடம் புகார் அளித்தார். இதனையடுத்து, ஜெயக்குமாரின் குடும்பத்தார் மீது 498a, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு மணப்பாறை மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதனால் பயந்துபோன ஜெயக்குமார், தனது குடும்பத்துடன் தலைமறைவானார். இந்நிலையில், குடும்பத்தோடு தலைமறைவாகி 6 மாதங்கள் கடந்த நிலையில் ஸ்ரீரங்கம், உய்யங்கொண்டான் திருமலை, இனாம்குளத்தூர், மணப்பாறை என தொடர்ச்சியாக பல இடங்களுக்கு 5 சிம்கார்டுகளை வைத்து மாறி மாறி தலைமறைவாகிக் கொண்டிருந்தது தெரியவந்தது. பிறகு தனிப்படை போலீசார் அங்கு சென்று ஜெயக்குமாரை அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து ஜெயக்குமார் பயன்படுத்திய செல்போன், லேப்டாப், பென்டிரைவ், சிடி, ஹார்டுடிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரித்து வந்தனர்.

Dinakaran 1

இந்த சம்பவம் குறித்து ஜெயக்குமாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டது. அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது:- ” என்ஜினீயரிங் படிப்பு முடித்த நான், வங்கித் தேர்வு எழுதி கடந்த 2014-ம் ஆண்டு குளித்தலையில் உள்ள வங்கி ஒன்றில் கிளர்க்காக பணியில் சேர்ந்தேன். பின்னர் 2016-ம் ஆண்டு பணிமாறுதல் ஆகி புதுக்கோட்டைக்கு வந்தேன். எனக்கும், தஞ்சாவூரை சேர்ந்த தாட்சர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது பணம் மற்றும் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. கூடுதலாக வரதட்சணை வாங்கி வரும்படி தாட்சரிடம் கூறினேன்.

மேலும், திருமணத்திற்கு முன்னர் எனக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்தது. அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை எனது செல்போனில் பதிவு செய்து அடிக்கடி பார்த்து ரசித்து வந்தேன். இதனால், மனைவி மீது எனக்கு ஈர்ப்பு இல்லாமல் போய் விட்டது. அவருடன் நெருங்கி பழகுவதை தவிர்த்து வந்தேன். எனக்கு வரும் ஆபாச குறுஞ்செய்தி (மெசேஜ்) மற்றும் வீடியோக்களை எனது மனைவி பார்த்து விட்டார். மேலும் நான் வங்கியில் வேலை பார்க்கும் சக ஊழியர்களையும், வீட்டின் அருகில் வசிக்கும் பெண்களையும் அவர்களுக்கு தெரியாமல் ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து எனது செல்போனில் வைத்திருந்தேன்.

மேலும், வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள் பாஸ்புக் மற்றும் பணபரிவர்த்தனைகளையும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து வைத்திருந்தேன். திருமணத்திற்கு முன்பாக பல பெண்களை வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எனது செல்போன்களில் இருந்ததை எனது மனைவி பார்த்து விட்டு இதுபற்றி என்னிடம் கேட்டு பிரச்சினை செய்தார்.

இதனால் கைகலப்பு ஏற்பட்டு நான் எனது மனைவியை அடித்தேன். இதுபற்றி எனது அம்மாவிடம் எனது மனைவி கூறியபோது என் அம்மாவும் தாட்சரையே திட்டினார். அதன்பிறகு என் மனைவி குளிக்கும்போது நான் அவருக்கு தெரியாமல் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து என்னிடம் பிரச்சினை செய்தால் நான் இந்த புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவதாக மிரட்டினேன். இதையடுத்து என் மனைவி அவர் ஊருக்கு சென்று புகார் அளித்து விட்டார். இதனால், நான் திருச்சி உள்பட பல்வேறு இடங்களில் தலைமறைவாக இருந்தேன்” என்று கைதான திருச்சி பிளேபாய் ஜெயக்குமார் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார்.

Newsnation_Admin

Next Post

கணவர் 10 ஆம் வகுப்பு மாணவியுடன் உல்லாசம்..! மனைவின் நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை..!

Tue Sep 15 , 2020
மதுரை சிறுமியின் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மனைவின் நடத்தில் சந்தேகப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்ததாக கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை டி.கல்லுப்பட்டி அருகே டி.அம்மாபட்டியை சேர்ந்தவர் தவுடன். இவரது மூன்றாவது மகள் ஜெயசக்தி பாலா கடந்த வருடம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்த நிலையில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவெடுத்துள்ளனர். […]
WhatsApp Image 2020 09 14 at 3.07.44 PM 4

You May Like