கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..!

ஆன்லைன் பொருட்கள் மூலம் கொரோனா?… தமிழ்நாடு வணிகா் சங்கம்…

திருச்சியில் இன்று நடந்த செய்தியாளா் சந்திப்பில், ஆன்லைன் பொருட்கள் விற்பனை மூலம் கொரோனா பரப்பப்படுகிறதா என்ற சந்தேகத்தை தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் எழுப்பி உள்ளது.

trichy pressmeet 1

திருச்சியில் இன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவா் விக்கிரமராஜா, மாநில பொதுச்செயலாளா் கோவிந்தராஜுலு ஆகியோர் கூட்டாக இன்று செய்தியாளா்களை சந்தித்தனா். அப்போது அவா்கள் கூறுகையில், கொரோனா தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாத்திட தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை பாராட்டுக்குரியது. அரசின் ஆணையை ஏற்று வணிக நிறுவனங்கள், ஷாப்பிங் மால்களை வணிகா்கள் மூடி உள்ளனா். ஆனால் சிறிய அளவிலான வணிக வளாகங்களை மூடுமாறு ஆங்காங்கே அதிகாரிகள் வற்புறுத்தி வருகிறார்கள்.

இது குறித்த ஒரு தெளிவான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்க வேண்டும். மேலும் அரசு உத்தரவின் காரணமாக வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு உள்ளதால், வணிகா்கள் பெருமளவு நஷ்டத்தை சந்தித்து உள்ளதாகவும், எனவே வருமான வரி, ஜிஎஸ்டி வரி, உள்ளிட்ட வரி செலுத்துவதற்கு காலநீட்டிப்பு வழங்குவதோடு, அதற்கு வட்டி, அபராதம் ஏதும் வசூலிக்க கூடாது என்றும், வங்கி கடன் தொகை செலுத்துவதிலும் கால அவகாசம் வழங்கிட வேண்டும், இக்காலகட்டத்தில் வங்கி கணக்கில் உரிய பண இருப்பு வைத்திருக்க இயலாது என்பதால், முன் தேதியிட்டு வழங்கப்பட்ட காசோலைகளை திருப்பி அனுப்புவதை நிறுத்தி வைக்க வங்கிகள் முன்வர வேண்டும்.

தண்ணீா் கட்டணம், மின் கட்டணம் 6 மாத காலங்களுக்கு குறைந்த பட்ச அளவீடு கணக்கில் கொள்ள வேண்டும் என்று அடுக்கடுகாய் கோரிக்கைகளை வைத்த அவா்கள் தொடா்ந்து கூறும்போது, ஏற்கனவே ஆன் லைன் வா்த்தகத்தால் வணிகா்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வரும் நிலையில், இந்த காலக்கட்டத்தை பயன்படுத்தி கொள்ளும் வண்ணம் பிரபல ஆன்லைன் வணிக நிறுவனம் ஒன்று ஒரு லட்சம் பேரை பணியாளா்களாக புதிதாக பணியமா்த்தி உள்ளது. இந்த நெருக்கடியான நிலையை பயன்படுத்தி சில்லரை வணிகத்தை கபளீகரம் செய்யும் வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள ஆன்லைன் வணிக நிறுவனங்கள் விரும்புகின்றன.

இதில் அரசு தலையிட்டு உடனடியாக நிறுத்திட வேண்டும். இந்தியாவில் இந்த ஆன்லைன் பொருட்கள் விற்பனை மூலம் கொரோனோ வைரஸ் பரப்பப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்றும் அவா்கள் கூறி முடித்தனர். மேலும், இதுதொடர்பாக முதல்வர், உள்ளாட்சித்துறை அமைச்சர், சுகாதாரத்துறை ஆகியோரை சந்திக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றார். உடன் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு மற்றும் நிர்வாகிகள் இருந்தனர்.

1newsnationuser2

Next Post

5 கணவர்களுடன் வாழ்ந்த திரௌபதியை ‘உலகின் சிறந்த பத்தினி’ என்று கூறிய கிருஷ்ணர்.. ஏன் தெரியுமா..?

Wed Mar 18 , 2020
திரௌபதியை விட இந்த உலகில் யாரும் கன்னியும் இல்லை, பத்தினியும் இல்லை என்று பகவான் கிருஷ்ணர் கூறியுள்ளார். 5 கணவர்களுடன் வாழ்ந்த திரௌபதியை கிருஷ்ணர் இப்படி கூறியதற்கு காரணம் என்ன தெரியுமா..? மகாபாரதக் கதையில் வரும் திரௌபதி 5 கணவர்களுடன் வாழ வேண்டும் என்ற ஆசையில் அர்ச்சுனனுக்கு மணக்கவில்லை. விதிவசத்தால் பஞ்ச பாண்டவர்களுக்கு மனைவியானாள். திரௌபதி 5 கணவன்மார்களுடன் வாழ்ந்தாலும் கூட, ஒரு வருடத்திற்கு ஒருமுறை தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு […]
Lord Krishna Pandavas and Draupadi

You May Like