அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

திருச்சி ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் எண்ணிக்கை 50 சதவீதம் குறைவு…ரயில்வே எஸ்.பி…

கொரோனா அச்சம் காரணமாக ரயிலை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இருப்பு பாதை காவல் துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

trichy railway sp

திருச்சி ரயில் நிலையத்தில் நடைப்பெற்று வரும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திருச்சி இருப்பு பாதை காவல் துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில்வே காவல் துறை சார்பிலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் பயணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

trichy railway sp2

குறிப்பாக கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வரும் பயணிகள் தெர்மல் ஸ்கேனிங் மூலம் பரிசோதிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவர். நாகர்கோயில், ராமேஸ்வரம் போன்ற வெளியூர் பயணிகள் அதிகம் வரும் ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி நிர்வாகம் மூலம் தூய்மை பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு இரயில் நிலையங்கள் சுகாதாரம் மேம்பாட்டுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.

trichy junction 1

மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தற்போது ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. பிரதமரின் அறிவுறுத்தலின் படி வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பணியில் உள்ள காவலர்கள் மட்டுமே பணிக்கு வருவர். மற்றவர்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ரயில் பயணிகளை தவிர மற்ற அனைவரும் (பிச்சைக்காரர்கள், ஆதரவற்றோர்) ரயில் நிலைய நடைமேடைகளில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை. அவ்வாறு தங்கி இருப்பவர்கள் ரயில் நிலையங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர் என்றார்.

1newsnationuser2

Next Post

24 மணி நேரம் மெட்ரோ ரயில்கள் இயங்காது..

Fri Mar 20 , 2020
தலைநகர் டெல்லி மற்றும் சென்னையில் வரும் 22ந் தேதி மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரானாவை கட்டுப்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி கூறி உள்ளார். இதற்காக அடுத்த சில வாரங்கள் மக்கள் அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதோடு, 22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் சுய ஊரடங்கை பின்பற்றி வேண்டும் என கோரியுள்ளார். இதையடுத்து, வரும் 22-ம் தேதி […]
shutterstock 7618412111 e1534762954368

You May Like