நம்ப வைத்து ஏமாற்றிய த்ரிஷா..!! லியோ படத்தில் இருந்து திடீர் விலகல்..? ரசிகர்கள் பயங்கர ஷாக்..!!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று ’லியோ’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் நாயகனாக நடித்து வருகிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லியோ படத்தின் புரோமோ மற்றும் அடுக்கடுக்கான அப்டேட்டுகளும் கடந்த வாரம் வெளியாகி சோஷியல் மீடியாவையே அதிரவைத்தது. தற்போது காஷ்மீரில் அப்படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. லியோ படத்தில் நடிக்க த்ரிஷா கமிட்டாகி உள்ளார். ஏற்கனவே விஜய் உடன் குருவி, கில்லி, ஆதி, திருப்பாச்சி போன்ற படங்களில் நடித்துள்ள இவர், 5-வது முறையாக மீண்டும் விஜய்யுடன் கைகோர்க்கிறார். இருவரும் 14 ஆண்டுகளுக்கு பின் சேர்ந்து நடிக்கின்றனர். மற்றொரு ஸ்பெஷல் என்னவென்றால் விஜய்க்கும் திரிஷாவுக்கும் இது 67-வது படமாகும்.

இதற்கிடையே நடிகை த்ரிஷா, லியோ படத்தில் இருந்து விலகிவிட்டதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இந்த குழப்பத்திற்கு காரணமே த்ரிஷா தான். ஏனென்றால், அவர் லியோ படத்தில் நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர், அவரைப்பற்றி நெட்டிசன்கள் போட்ட ட்வீட் பலவற்றை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்திருந்தார். ஆனால், தற்போது அதில் பெரும்பாலான ட்வீட்களை அவர் நீக்கி உள்ளார். இதைவைத்து தான் அவர் லியோ படத்தில் இருந்து விலகிவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இருப்பினும் லியோ பட பூஜையில், விஜய்யுடன் ஜோடியாக எடுத்த புகைப்படம் மற்றும் லியோ படக்குழு தான் அப்படத்தில் இணைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்து வெளியிட்ட போஸ்டர் ஆகியவற்றை த்ரிஷா நீக்கவில்லை. இதனால், அவர் லியோ படத்தில் இருந்து விலகியதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று கூறப்படுகிறது.

Chella

Next Post

வீட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு….! ரவுடிக்கு ஏற்பட்ட பரிதாபம் காவல்துறையினர் அடுத்த அதிரடி நடவடிக்கை….!

Tue Feb 7 , 2023
திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருக்கிறது, போதை பொருளை கட்டுப்படுத்துகிறோம், கொலை, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் பல்வேறு தகவல்களை மாநில அரசு தெரிவித்து வருகிறது. ஆனாலும் அது போன்ற எந்த ஒரு நடவடிக்கையும் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவில்லை என்று தற்போது தமிழகத்தில் நடைபெறும் பல சம்பவங்களை உற்று நோக்கினால் நம்மால் புரிந்து கொள்ள முடியும். சென்னை அம்பத்தூர் பகுதியில் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like