உடைந்தது காங்கிரஸ் – திமுக கூட்டணி ? தற்கொலை செய்வேன் என திமுக எம்.பி மிரட்டல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் – 'ஸ்பைடர் மேன்' ரிஷப் பந்த் 30 நொடிகளுக்கு ஒரு நபர்.. மோசமான நிலையில் இங்கிலாந்து.. வெளியான அதிர்ச்சி தகவல்.. ஸ்மித்தை கலாய்த்த ஹிட்மேன் ! ரசிகர்களை குஷிப்படுத்திய நடனம் 2021 ஆசிய கோப்பை – இந்தியா விலகல்? அதிர்ச்சியில் பாகிஸ்தான் பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..!

ட்ரம்ப் அதிரடி: உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறிய அமெரிக்கா

உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறுவதற்கான, கடிதத்தை ஐ.நா. பொதுச்செயலாளரிடம் அமெரிக்கா வழங்கியுள்ளது.

who

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரசால் உலக அளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா ஆகும். இந்நிலையில், கொரோனா வைரஸ் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் வைரஸ் தொடர்பான விவரங்களை சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறார்.

மேலும், இந்த வைரசின் தீவிர தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்ததாக உலக சுகாதார அமைப்பு மீதும் டிரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இதற்கிடையே, கடந்த மே -19 ஆம் தேதி உலக சுகாதார அமைப்புக்கு டிரம்ப் எழுதிய கடிதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் அடுத்த 30 நாட்களில் பெரும் அளவில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.

டிரம்ப் மற்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர்

அவ்வாறு முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் இந்த அமைப்புக்கு வழங்கி வரும் நிதி நிரந்தரமாக நிறுத்தப்படும் எனவும் அமெரிக்கா இந்த அமைப்பில் இருந்து வெளியேறும் என்று பகீரங்க எச்சரிக்கை விடுத்தார்.

ஆனால், வைரஸ் தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில் உலக சுகாதார அமைப்பு பெரிய அளவில் முன்னேற்றம் எதையும் காணவில்லை. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கிவந்த பல மில்லியன் டாலர்கள் நிதியை நிறுத்தினார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா வெளியேறியுள்ளது.
இந்த அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரசிடம் அமெரிக்க அரசு அனுப்பி வைத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டதாக அமெரிக்கா அறிவித்தாலும் ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

117 நாட்களுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்.. ரசிகர்கள் மகிழ்ச்சி அண்ணாச்சி

Wed Jul 8 , 2020
உலக அளவில் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கை தொடர்ந்து 3 மாதங்களுக்கு பிறகு, முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியாக இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவு அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி சவுத்தம்ப்டனில் இன்று தொடங்குகிறது. கடைசி சர்வதேச போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இடையே மார்ச் 13 அன்று நடைபெற்றது. பின்னர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் […]
Pic 1594179638397

You May Like