அமலுக்கு வந்தது மத்திய அரசின் புதிய கோவிட் – 19 வழிகாட்டுதல்கள்.. எதற்கெல்லாம் அனுமதி.. எதற்கெல்லாம் தடை.. சசிகலா முன்கூட்டியே விடுதலையாக கூடாது.. தடை போடும் அதிமுக..? பின்னணி என்ன..? வயலில் வேலைபார்த்த 110 விவசாயிகள் கழுத்தை அறுத்து கொலை..! ஒரே இடத்தில் தகனம்..! ரூ.15,000 கோடி மதிப்பிலான முகேஷ் அம்பானியின் பங்களா..! 3 ஹெலிகாப்டர், மினி தியேட்டர், 600 ஊழியர்கள்.. இன்னும் பல..! வலுப்பெறும் புயல்.. அதிகனமழை கொட்ட போகும் 5 மாவட்டங்கள்.. வானிலை மையம் எச்சரிக்கை.. காதலனை பிரிந்திருக்க முடியாமல் ரூ.32 கோடி செலவழித்த ஆலியா..! அப்படி என்ன செலவு பண்ணாரு..? RTGS பண பரிமாற்றத்தில் வந்தது நேரக் கட்டுப்பாடு..! முழு விவரங்கள் உள்ளே.. காதலிக்கு வேறு ஒருத்தன் அனுப்பிய குறுஞ்செய்தி..! அடுத்து நடந்த பயங்கரம்..! மின்கம்பி அறுந்து விழுந்து கைகளை பறிகொடுத்த பெண்..! வாயை திறக்காத மின்வாரியம்..! எப்போதும் போல ஒரே வார்த்தை தான்.. அரசியல் களத்தை மீண்டும் பரபரப்பாக்கிய மு.க அழகிரி.. மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. கள்ளத்தொடர்பை தட்டி கேட்ட மனைவி..! ஏட்டு மீது பாய்ந்த வழக்கு..! நாளை கரையை கடக்க உள்ள புரேவி புயல்.. 11 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.. வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் புக் செய்வது எப்படி..? இந்த நிறுவனத்தில் டிரைவர் முதல் பியூன் வரை எல்லோரும் கோடீஸ்வரர் தான்..! ஏன் தெரியுமா..?

2-வது முறை நடைபெற்ற பரிசோதனையிலும் டிரம்பிற்கு கொரோனா பாதிப்பு இல்லை ; வெள்ளை மாளிகை அறிவிப்பு

donald trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு இரண்டாவதாக நடைபெற்ற பரிசோதனையிலும் கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.


சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவிவருகிறது. இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனாவின்  கோரத்தாண்டவம் அதிகரித்துவருகிறது. முதல் முறையாக கடந்த 1-ம் தேதி ஒரே நாளில் ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

corona ward

 தொடர்ந்து, அமெரிக்காவில் கொரோனா வைரசால் அதிகபட்சம் 2 லட்சம் பேர் வரை பலியாவார்கள் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்த நிலையில், அது தற்போது உச்சக்கட்டத்தை எட்ட ஆரம்பித்துள்ளது. பலி எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வந்த நிலையில், தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,062 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,44,320-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாளில் 968 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில் அடுத்து வரும்  இரண்டு நாட்கள் இன்னும் மிகவும் மோசமாக இருக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். தற்போதே அமெரிக்கா முழுவதும் 80 சதவீத மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  

amrica white house

இதற்கிடையே, சமீபத்தில் வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப், ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் பிட்டனை சந்தித்து பேசினார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவியிருக்குமோ? என்ற அச்சத்தில் அதிபர் டிரம்ப் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் . பரிசோதனை முடிவில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளதை தொடர்ந்து அதிபர் டிரம்ப் சற்று பெரும் மூச்சு விட்டுள்ளார்.

முன்னதாக மார்ச் 15-ம் தேதிவெள்ளை மாளிகையில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொரோனா பரிசோதனை செய்துகொண்டார். பரிசோதனை முடிவில் டிரம்புக்கு கொரோனா இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser3

Next Post

3வயது குழந்தையின் தலையில் சிக்கிய பானை...குழந்தையை மீட்ட தீயணைப்பு வீரர்கள்...

Fri Apr 3 , 2020
ஆவடி அருகே 3 வயது குழந்தை விளையாடி கொண்டிருக்கும் போது சில்வர் பானைக்குள் குழந்தையின் தலை சிக்கியது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் குழந்தையை மீட்டனர். ஆவடியை அடுத்த கோவில்பதாகை, அசோக் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் திவ்யன் (வயது 3). நேற்று மாலை வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த திவ்யன், திடீரென வீட்டில் இருந்த சில்வர் […]
a-3-year-old-boy's-head-was-caught-in-a-pot

You May Like