2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..!

இந்தியாவை மிரட்டும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்..

கொரானாவிற்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை அனுப்பாவிடில், இந்தியா அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

donald trump iran remarks 02 gty jc 200108 hpMain 16x9 992 2


கொலைகார நோயான கொரானா வைரஸ், உலக அளவில் அதிகம் பரவிய நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அந்நாட்டில் கொரானா பாதிப்பு 3.3 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழப்பு 10 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதியதாக 30 ஆயிரம் பேருக்கு மேல் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர். அடுத்த 2 வாரங்களில் அமெரிக்காவில் இறப்பு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்கா ஆர்டர் செய்திருந்த கொரானா சிகிச்சைக்கு உபயோகப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் உள்பட மருத்துவ பொருட்களை இந்தியா எங்களுக்கு வழங்க வேண்டும் என டிரம்ப் பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் உரையாடும்போது வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், இந்தியாவிலும் கொரானா பாதிப்பு அதிகம் உள்ளதால், மருந்து தேவை அதிகரித்துள்ளது. எனவே, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஏற்கனவே தடைவிதித்து உள்ளது.

donald trump

இந்நிலையில், வெள்ளைமாளிகையில் அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ட்ரம்ப், நான் பிரதமர் மோடியிடம் இதுகுறித்து பேசினேன். ஆர்டர் செய்த மருந்துகளை நாங்கள் பெற அனுமதி அளித்தால் நன்றாக இருக்கும் என கூறினேன். நட்பு நாடு என்கிற அடிப்படையில் அமெரிக்காவுக்கு இந்தியா மருந்து அனுப்பும் என நம்புகிறேன். மருந்தை அனுப்பவிலையென்றாலும், பரவாயில்லை; ஆனால் அதற்கான விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும். ஒருவேளை அவ்வாறு நிகழ்ந்தால் அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படலாம்’ என்றார்.

1newsnationuser4

Next Post

மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கான தடையை நீக்கிய மத்திய அரசு

Tue Apr 7 , 2020
இந்தியாவில் இருந்து 24 வகையிலான மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை மத்திய அரசு நீக்கி உள்ளது. இந்தியாவில் கொரானா நோய்த்தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நோய்பரவலை கட்டுப்படுத்தவும் மற்றும் எதிர்கால மருந்து தேவையை கருத்தில் கொண்டும் சில மருந்துப் பொருட்களின் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தது. குறிப்பாக இந்தியாவில் மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் ஹைட்ரோகுளோரோகுயின் என்ற மருந்தை கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கு தடுப்பு மருந்தாக பயன்படுத்தலாம் […]
States most affected by Coronation ... consultation with Prime Minister ...

You May Like