ஆவின் பாலகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! வீடு தேடி வந்து பெண்ணை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர்..! பட்டபகலில் நடந்த பரபரப்பு..! பிரபல இயக்குநருக்கு மியூசிக் போட்ட நடிகர் விவேக்! கண்ணான கண்னே – வைரல் வீடியோ உள்ளே நடிகர் ரஜினியின் அதிரடியான அடுத்தக்கட்ட நகர்வு ! உற்சாகத்தில் ரசிகர்கள் – தீபாவளிக்கு என்ட்ரி சசிகலாவுக்கு கொரோனா அறிகுறிகள் நீங்கிவிட்டதாம்… மருத்துவமனை தகவல் "எங்களுக்கு இது தான் வேலையா.. படம் வந்த பிறகு பாருங்க" சீமானுக்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி தலையில் பைக்கை சுமந்து பேருந்தில் ஏற்றும் நபர்.. “வறுமையை ஆபாசமாக பெருமைப்படுத்தும் அறிவுஜீவிகள்..” #Video நடிகர் சித்தார்த்துக்கு திருமணம் – குவியும் வாழ்த்துகள் ஆதார் எண், ஓடிபி போன்ற விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்; அரசு பலாத்காரம் செய்தது அவர் தான்.. ஆன குழந்தைக்கு அப்பா அவரு இல்ல..! சிறை தண்டனையின் போது வெளியான அதிர்ச்சி..! மோடி இந்த சட்டத்தைக் கொண்டுவந்தால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்.. திரிணாமூல் காங்., எம்.பி சவால்.. "வெற்றி பெற்றால் அதிமுக-பாஜக சேர்ந்து தான் ஆட்சி அமைக்கும்.." சி.டி.ரவியின் பேச்சால் அதிமுக அதிர்ச்சி..! "நீயா நானா கோபிநாத்" வீட்டில் மற்றுமொரு பிரபலம்..! இந்த நடிகரா அவர்..? “ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து இதை மட்டும் ரத்து செய்தால்.. என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன்..” அதிமுக முன்னாள் எம்.பி பேச்சு.. பள்ளி மாணவிகளின் பாலியல் வழக்கு..! அரசு பள்ளி ஆசிரியருக்கு 49 ஆண்டுகள் சிறைத்தண்டனை..!

தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள்

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழர் பாரம்பரிய முறைப்படி மஞ்சள் கொண்டு நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்க கூடிய பல்வேறு எளிய டிஸ்களை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

1524831350 0767

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைப் பெருக்குவதில் மஞ்சள் முக்கியமான உணவுப் பொருள். மிகச்சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படும் மஞ்சள், பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதும் கூட. அதனால் தான் நம் தமிழர் பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது மஞ்சள்.

மஞ்சளில் உள்ள குர்க்குமின் எனும் ரசாயனப் பொருள் புற்றுநோய்க் கட்டி ஏற்படாமல் தடுக்கும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமலும் தடுக்கும். பாக்டீரியாக்களின் தாக்குதலையும் முறியடிக்கும். இதனால் தான், மஞ்சளின் மகத்துவத்தை அறிந்த நம் முன்னோர்கள் உணவுப் பொருள்களில் அதிகளவில் மஞ்சளைச் சேர்த்துக்கொண்டனர். ரசம், குழம்பு, சூப்பு என்று எதுவானாலும் துளியளவு மஞ்சள் சேர்த்தால் தான் நிறைவு பெறும்.

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி ஆரோக்கியத்தை வழங்கும் மஞ்சளை அடிப்படையாகக் கொண்ட உணவுப்பொருள்கள் சிலவற்றை அறிந்துகொள்வோம்.

1594110793239

மஞ்சள் பால்

’வெறும் பாலைக் குடிக்காமல், சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக்குடி’ என்று பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம். ஒரு கிளாஸ் பாலில் கால் டீஸ்பூன் மஞ்சளைக் கலந்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும். பிறகு, பாலை வடிகட்டி, தேன் அல்லது கருப்பட்டி சேர்த்து இளம் சூடாகக் குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது. தூங்குவதற்கு முன்பு மஞ்சள் பால் பருகினால், அதிக பலன்களைப் பெற முடியும்.

மஞ்சள் பாலை தினமும் பருகி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். தோல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். மஞ்சளில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவை எதிர்க்கும் தன்மை இருப்பதால் சளி, இருமல் பிரச்னை நீங்கும், சைனஸ் பிரச்னை சரியாகும்.

மஞ்சள் தண்ணீர்

தினமும், காலையில் எழுந்ததும் மஞ்சள் தண்ணீர் குடிப்பதென்பது சற்றே சலிப்பை ஏற்படுத்தும். ஆனால், மஞ்சள் தண்ணீர் குடித்து அதன் பலனை உணரத் தொடங்கிவிட்டால், குடிப்பதை நிறுத்தமாட்டீர்கள். உடல் பலவீனமாக இருப்பவர்களுக்கு அமிர்தம் போன்றது மஞ்சள் தண்ணீர்.

1594110865114345

தண்ணீரை நன்கு சுடவைத்து, அதில் சற்றே துளசி மற்றும் மஞ்சள் பொடியைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் பருக வேண்டும். இந்தச் சுவை பலருக்கும் பிடிக்காது. அதனால், இத்துடன் சற்றே தேன், கருப்பட்டியையும் சேர்த்துக்கொள்ளலாம்.

தினமும் காலையில் மஞ்சள் தண்ணீர் குடித்துவந்தால் அந்த நாளே உற்சாகமாக மாறிவிடும். சளித்தொல்லை நீங்கும், உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். ஆஸ்துமா பிரச்னை நீங்கும். அல்சர், அசிடிட்டி ஆகியவையும் சரியாகும்.

மஞ்சள் சூப்பு

நாம் வழக்கமாகச் சாப்பிடும் தக்காளி, காளான், கோழி, ஆட்டுக்கால் சூப்புடன் மஞ்சள் கலந்து சாப்பிட்டால் அபரிமிதமான நன்மைகள் ஏற்படும். வழக்கமாக சூப்பு வைத்து முடித்ததும் சற்றே அதிகமாக மஞ்சள் சேர்த்து, நன்கு கலக்கிவிட்டு ஒருமுறை கொதிக்கவைத்துப் பருகவும்.

1594110778658

அவ்வப்போது மஞ்சள் சூப்பு பருகுவதன் மூலம் சுவாசப் பிரச்னைகள் நீங்கும். உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

மஞ்சள் டீ

பால் குடிக்கும் பழக்கத்தைவிடவும் டீ குடிக்கும் பழக்கமே நம்மில் பலருக்கும் உண்டு. டீ பிரியர்களுக்கானது தான் இந்த மஞ்சள் டீ. வழக்கமான முறைப்படி டீ தயாரித்ததும் இறுதியாக சற்றே மஞ்சள் பொடி சேர்த்து டீ குடித்துவந்தால் மன அழுத்தம் முற்றிலும் விலகிவிடும். இஞ்சி டீ குடிப்பவர்களும் மஞ்சள் சேர்த்துக் குடிக்கலாம். இஞ்சியுடன் மஞ்சள் சேரும் போது பல்வேறு நன்மைகள் உடலுக்கு ஏற்படும்.

மஞ்சள் டீ கல்லீரலைப் பாதுகாக்கும். செரிமான பிரச்னைகளைப் போக்கும். சளி மற்றும் தீராத இருமலால் அவதிப்படுபவர்கள் மஞ்சள் டீயை நிச்சயம் பயன்படுத்தலாம்.

1newsnationuser4

Next Post

இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்..

Tue Jul 7 , 2020
ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் ‘மூலிகை மைசூர்பா’ குறித்து கோவை ஸ்வீட் கடை உரிமையாளர் வழங்கி வரும் நோட்டீஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்றுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. தடுப்பு மருந்துகளை கண்டுபிடித்து அதனை மனிதர்களுக்கு சோதனை செய்துள்ளனர். கொரோனாவை முழுமையாக குணப்படுத்தும் தடுப்பு மருந்து இன்னும் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்தும் […]
மூலிகை மைசூர்பா

You May Like