மோட்டார் சைக்கிள்களில் பிரபலமான மாடல்களான அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 மற்றும் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180 ஆகியவற்றின் விலையை டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் உயர்த்தி அறிவித்துள்ளது.

டி.வி.எஸ் நிறுவனத்தின் அப்பாச்சி தொடரிலிருந்து வெளியானவற்றில் குறிப்பிட்ட இந்த இரண்டு வாகனங்களும் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதன் காரணமாகவே அறிமுகமாகி நீண்ட நாட்களாகியும் சந்தையில் இந்த மாடல் இருசக்கர வாகனங்களுக்கு தொடர்ந்து தேவை இருந்து கொண்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு மாடல்களின் விலையையும் டி.வி.எஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இதில், அப்பாச்சி ஆர்டிஆர் 160 டிரம் மற்றும் டிஸ்க்கின் விலை 2000 ருபாயும், அப்பாச்சி ஆர்டிஆர் 180 மாடலின் விலை 2,500 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது.
டி.வி.எஸ் நிறுவனத்தின் விலை உயர்வுக்குப் பிறகு, இப்போது அப்பாச்சி ஆர்டிஆர் 160 டிரம் பிரேக் வகைகளின் விலை 97 ஆயிரம் ரூபாயாக மாறியுள்ளது. அதே நேரத்தில், அப்பாச்சி ஆர்டிஆர் 160 டிஸ்க் வேரியண்ட்களின் விலை ரூ .1 லட்சம் ஆகும். விலை உயர்வுக்குப் பிறகு, அப்பாச்சி ஆர்டிஆர் 180 இன் விலை ரூ .1,03,950 ஆக உயர்ந்துள்ளது.

டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 160 வாகனத்தில் புதிய பிஎஸ் 6 பியூல் எமிசன் 159 சிசி ஏர் கூல்ட் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த எஞ்சின் 8400 ஆர்பிஎம்மில் 15.3 ஹெச்பி சக்தியையும், 7000pm க்கு அதிகபட்சமாக 13.9NM டார்க்கையும் உருவாக்குகிறது. இந்த பைக்கில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது.
டி.வி.எஸ் அப்பாச்சி ஆர்.டி.ஆர் 180 புதிய பிஎஸ் 6 பியூல் எமிசன் 177.4 சிசி ஆயில் கூல்ட் இன்ஜினுடன், ஒற்றை சிலிண்டரையும் கொண்டுள்ளது. இந்த எஞ்சின் 8500 ஆர்பிஎம்மில் 16.5 ஹெச்பி ஆற்றலையும், 7000 ஆர்பிஎம்மில் அதிகபட்சமாக 15.5NM டார்க்கையும் உருவாக்குகிறது. மேலும், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கிடைக்கிறது.

இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் இன்ஜினிலும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் எந்த மாற்றமும் செய்யவில்லை. மேலும், இந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களின் வடிவமைப்பு மற்றும் லுக் வாடிக்கையாளர்கள் மிகவும் கவர்ந்து அவற்றின் விற்பனையும் நன்றாக உள்ளதால்,கடந்த சில ஆண்டுகளை போலவே இம்முறையும் அதில் பெரியதாக எந்த மாற்றமும் மேற்ககொள்ளப்படவில்லை.