16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு வழங்கிய இளைஞருக்கு 25 ஆண்டுகால சிறை தண்டனை……! தஞ்சாவூரில் பரபரப்பு……!

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவர் கடந்த 2018 ஆம் வருடம் 16 வயது சிறுமியை காதலித்து வந்தார். அப்போது அந்த சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் 32 வயது ஆண் ஒருவர் அந்த சிறுமியின் அண்ணனை பார்ப்பதற்காக வந்திருக்கிறார்கள். அப்போது சிறுமியின் காதல் விவகாரம் அவருக்கு தெரியவந்து விட்டது.

ஆகவே அந்த நபரும் சிறுமியையும் விரட்டி அவருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியுள்ளார். இந்த சூழ்நிலையில், சிறுமி கர்ப்பம் அடைந்திருக்கிறார். இதனை அடுத்து தன்னுடைய காதலியிடம் தான் கர்ப்பமாக இருப்பதாகவும், தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறும் தெரிவித்திருக்கிறார் இதற்கு அந்த நபர் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

ஆகவே அருகில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த சிறுமி புகார் வழங்கியிருக்கிறார் இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான நபரை கண்டறிவதற்கு டிஎன்ஏ சோதனை நடத்தினர். இதில் சிறுமியின் அண்ணனை பார்க்க வந்த 32 வயது நபர்தான் அந்த சிறுமியின் கர்பத்திற்கு காரணம் என்று தெரியவந்தது.

இதனையடுத்து 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பிறகு இது குறித்த வழக்கு தஞ்சை போக்சோ சிறப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த சூழ்நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி சுந்தர்ராஜன் சிறுமி கர்ப்பம் ஆவதற்கு காரணமாக இருந்த 32 வயது நபருக்கு 25 ஆண்டுகால சிறை தண்டனையும் 80,000 விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.

அதேபோல சிறுமியை காதலித்து பாலியல் தொந்தரவு வழங்கிய 27 வயது இளைஞனுக்கு 20 வருட கால சிறை தண்டனையும் 50000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகின்றது. அதோடு, அபராத தொகையை கற்று தவறினால் 2 பேருக்கும் மேலும் 1 வருட கால சிறை தண்டனை விதிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

Next Post

Paytm UPI Lite : பயனர்கள் இனி PINஐ பயன்படுத்தாமல் பணம் செலுத்தலாம்.. புதிய வசதி அறிமுகம்..

Thu Feb 16 , 2023
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனை கணிசமாக அதிகரித்துள்ளன.. இண்டர்நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங் மட்டுமின்றி, ஜி பே (G pay), போன் பே (Phonepe) ஆகியவை மூலம் பணம் செலுத்தும் யுபிஐ பரிவர்த்தனை முறை வேகமாக அதிகரித்து வருகிறது.. ஒரு சிறிய பெட்டி கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை அனைத்து இடங்களிலும் யுபிஐ முறையில் பணம் செலுத்தி வருகின்றனர்.. க்யூ.ஆர் கோடை ஸ்கேன் செய்வது அல்லது மொபைல் எண் […]

You May Like