ட்விட்டர் ப்ளூடிக் இந்தியாவில் அறிமுகம்!…. விலை மற்றும் வசதிகள் இதோ!

Twitter Blue சந்தா சேவை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், இங்கிலாந்து, சவுதி அரேபியா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, போர்ச்சுகல், ஸ்பெயின், இந்தோனேஷியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் ட்விட்டர் ப்ளூ கிடைக்கிறது. இதுவரை, குறிப்பிட்ட சில நாடுகளில் மட்டுமே ட்விட்டர் ப்ளூ சந்தா சேவை கிடைத்து வந்தது. இந்தநிலையில், தற்போது இந்தியாவிலும் ட்விட்டர் ப்ளூ சந்தா அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாதம் ரூ.900 கட்டணம் செலுத்தி ப்ளூடிக் பயன்பாட்டை இருக்கும் இடத்தில் இருந்தபடியே பொதுமக்கள் பெற முடியும். மேலும், ட்விட்டர் பயனாளர்கள் ப்ளூடிக் வசதியை பெற தனியாக விண்ணப்பம் செய்ய வேண்டி இருந்த நிலையில் தற்போது அவர்கள் எளிதாக கட்டணம் செலுத்தி எளிய முறையில் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி மூலம் ட்விட்டர் ப்ளூ சந்தாவை பெற ட்விட்டர் அதன் பயனர்களை அனுமதிக்கிறது, இருப்பினும் ஆரம்பத்தில் இந்த வசதி இந்தியாவில் கிடைக்கவில்லை. இணையம் வழியாக ப்ளூ மெம்பர்ஷிப்பின் விலை மாதத்திற்கு ரூ.650 இன்று கூறப்பட்டுள்ளது. அதேபோல வருடாந்திரத் திட்டத்தைப் பெற்றால், ட்விட்டர் ப்ளூ மெம்பர்ஷிப்பின் விலை ஆண்டுக்கு ரூ. 6,800, அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.566.67 ஆகும். ட்விட்டரில் ஒருவரது ப்ரொபைலில் இருக்கும் ப்ளூ பேட்ஜ் கணக்கு உண்மையானது என்பதை காட்டுகிறது. இந்த பயனர்களின் ட்வீட்கள் மோசடிகள் மற்றும் ஸ்பேம்களை எதிர்த்துப் போராடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று ட்விட்டர் கூறியுள்ளது.

ப்ளூ சந்தா பயனர்கள் ட்வீட்களை பதிவிட்ட 30 நிமிடங்களுக்குள் ஐந்து முறை வரை திருத்தும் செய்துகொள்ளலாம் மற்றும் அவர்கள் முழு-ஹெச்டி திறனில் வீடியோக்களையும் பகிர்ந்து கொள்ளலாம். 90 நாட்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட ட்விட்டர் கணக்குகள் மட்டுமே ட்விட்டர் ப்ளூ பெற பதிவு செய்ய முடியும், அனைத்து ட்விட்டர் ப்ளூ சந்தாதாரர்களும் தங்களது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி வெரிஃபை செயல்முறையை முடிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட பேட்ஜுடன் இருக்கும் உறுப்பினர்களும் ட்விட்டர் ப்ளூ சந்தாவைப் பெற வேண்டும் என்று ஏற்கனவே ட்விட்டர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

தினமும் இளநீர் குடிப்பவரா நீங்கள்?.... ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்!

Fri Feb 10 , 2023
நாள்தோறும் இளநீர் அருந்துவதால், நாம் ஆரோக்கிய பிரச்சனைகள சந்திக்க வாய்ப்புள்ளது. அதன்படி, இளநீர் குடிப்பதால் என்னென்ன பிரச்சனைகள் உண்டாகும் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் இளநீர் அருந்துகின்றனர். ஏனென்றால், இயற்கை பானங்களிலேயே இளநீரில் தான் கலப்படம் செய்யவே முடியாது. இளநீர் ஒருவரது தாகத்தை தணிப்பதோடு, உடல் சூட்டைக் குறைக்கிறது மற்றும் உடலுக்கு தேவையான ஆற்றலை உடனடியாக வழங்குகிறது. இந்தநிலையில், இளநீரை அளவுக்கு […]

You May Like