சென்னை தியாகராய நகர் உஸ்மான் ரோட்டில் உள்ள பிரபல நகை கடை சார்பாக மாம்பலம் காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்று வழங்கப்பட்டது.
அந்த புகாரில் எங்களுடைய நகை கடையில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நந்தனம் பிரபீர் ஷேக் (38) என்பவர் நகைகளை செய்து கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரிடம் சமீபத்தில் நகைகளை செய்வதற்காக 2 கிலோ 46 கிராம் 10 மில்லி எடை கொண்ட தங்கக் கட்டிகளை வழங்கினோம்.
அதனை வாங்கிக் கொண்ட அவர் மற்றும் அவருடைய நண்பர் தியாகராய நகர் நடேசன் தெரு பாலமுருகன்( 41) உள்ளிட்ட ஒரு நகைகளை செய்து கொடுக்காமல் அவற்றை கையாளர்கள் செய்து விட்டனர். ஆகவே இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து தங்க கட்டியை மீட்டுத் தருமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இது குறித்து மாம்பலம் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அதில் இருவர் மீதும் வழங்கப்பட்ட புகார் உண்மை என்று தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பிரபீர் ஷேக், பாலமுருகன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.