ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..! கள்ள உறவை காட்டி கொடுத்த கேமரா..! காவலர்கள் பற்றி காவல்நிலையத்தில் புகார்..! 2020ல் இந்தியாவில் எல்லோரும் அதிகமா சொன்ன வார்த்தை இது தான்..! வாட்ஸ் அப்பில் அல்டிமேட் அப்டேட்..! 7 நாட்களில் தானாக மறையும் மெசேஜ்..! "தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை

மும்பை, பீகாரில் தலா ஒருவர் பலி.. இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்வு..

மும்பை மற்றும் பீகாரில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதால் இந்தியாவில் கொரோனா காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

Coronavirus bats cave collection 1280x720

கத்தார் நாட்டில் இருந்து, பீகார் மாநிலம் திரும்பிய 38 வயதான நபருக்கு கோவிட் – 19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் பாட்னாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு சிறுநீரக கோளாறு காரணமாக அவர் உயிரிழந்ததாக அம்மாநில சுகாதாரத் துறை செயலாளர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். கோவிட் – 19 காரணமாக, பீகாரில் முதல் உயிரிழப்பு பதிவாகி உள்ள நிலையில், இந்த 38 வயதான நபர் உயிரிழந்தது நாட்டின் இளவயது நபராக கருதப்படுகிறார்.

இதனிடையே மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கொரோனா பாதிப்பு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 63 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். கோவிட் – 19 பாதிப்புடன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், இதய நோய்களாலும் முதியவர் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது அம்மாநிலத்தில் ஏற்பட்ட 2-வது உயிரிழப்பாகும். அதேபோல் இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிகபட்சமாக 74 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona

சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,069 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, 326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கர்நாடகா, டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்தனர். அவர்கள் மூவருமே 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். இந்த சூழலில் பீகார், மும்பையில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளதால் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது.

பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் இன்று நாடு முழுவதும் 14 மணி நேர பொது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள், நகரங்கள் ஆள்நடமாட்டமின்றி பாலைவனம் போல வெறிச்சோடி காணப்படுகின்றன.

1newsnationuser1

Next Post

கொரோனா தீவிரம் எதிரொலி.. வரும் 31-ம் தேதி வரை பயணிகள் ரயில்கள் இயங்காது.. இந்திய ரயில்வே அறிவிப்பு..

Sun Mar 22 , 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 31-ம் தேதி வரை நாடு முழுவதும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,069 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை, 326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கர்நாடகா, டெல்லி, […]
trains cancelled

You May Like