உலக கிரிக்கெட்டில் இதுவரை பல அதிரடி பேட்ஸ்மேன்கள் தோன்றியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் இந்தியாவின் முன்னாள் இடது கை பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர் என்ற உலக சாதனையை யுவராஜ் சிங் தன் வசம் கொண்டுள்ளார்.

2007ல் நடைபெற்ற டீ ட்வெண்டி உலகக்கோப்பை போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி யுவராஜ் சிங் இந்த உலக சாதனை படைத்தார். இந்த போட்டியில், அவர் 12 பந்துகளில் மட்டுமே எதிர்கொண்டு அரைசதம் அடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் செய்யப்பட்ட இந்த உலக சாதனையை எந்த பேட்ஸ்மேனும் இதுவரை முறியடிக்கவில்லை.

ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இல்லாமல் உள்ளூர் தொடர்களில் இரண்டு பேட்ஸ்மேன்கள் இந்த சாதனையை படைத்துள்ளனர். மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி வீரர் முகமது ஷெஜாத் ஆகியோரும் 12 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர்.

பிக் பாஷ் லீக்கின் போது வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் வெறும் 12 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன் முகமது ஷாஜாத் ஒரு டி -10 லீக் போட்டியில் 12 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தி உள்ளார்.