தொடர் வெற்றிபெறுமா ராஜஸ்தான்…டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு! அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான்…அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு! கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு நாளை முதல் புதிய விதிமுறை அமல்! 'தோனி என்டெர்டைன்மெண்ட்டில் இனி வெப் சீரீஸ்…சாக்‌ஷி அறிவிப்பு! கே.எல்.ராகுலுக்கு எதிராக மெகா திட்டம் போடும் மும்பை இந்தியன்ஸ்! 'ஆளில்லா பேட்டரி வாகனம்' கிராமத்து இன்ஜினியரின் அசத்தல் கண்டுபிடிப்பு..! செவ்வாய் கிரகத்தில் புதிதாக 3 ஏரிகள் கண்டுபிடிப்பு..! வேறு அணிக்கு போகிறாரா ரெய்னா! சிஎஸ்கே-ரெய்னா உறவு முடிந்துவிட்டதா? முதல்வர் வேட்பாளர் சர்ச்சைக்கு மத்தியில் நாளை செய்தியாளர்களை சந்திக்கிறார் ஓபிஎஸ்.. மீண்டும் தர்ம யுத்தமா..? காயத்தால் தொடரில் இருந்து விலகிய மிட்சல் மார்ஷ்…திடீரென காணாமல் போன ஹெல்த் ரிப்போர்ட்! வங்கியில் வேலை வாய்ப்பு..! டிகிரி மட்டும் முடித்திருந்தால் போதும்..! காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிய மகள்..! ரவுடிகளுடன் சென்று தாக்கிய தந்தை..! சிஎஸ்கே-வின் தொடர் தோல்விக்கு காரணம் இவர்கள்தானாம்…சென்னை வீரர்களை திட்டும் கான்டராக்டர் நேசமணி! நீட் தேர்வின் போது தாலி, மெட்டியை கழட்ட சொல்வது சட்டத்திற்கு எதிரானது..? ஒரே ஒரு மீன் மூலம் பணக்காரர் ஆன மூதாட்டி…எவ்வளவு சம்பாதித்துள்ளார் தெரியுமா!

"தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை என மீண்டும் நிரூபித்த காவல்துறை" – உதயநிதி ஸ்டாலின்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை என மீண்டும், அம்மாவட்ட காவல்துறை நிரூபித்துள்ளது என்று உதயநிதி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி சிறையில் தந்தை மகன், உயிரிழந்தது குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவரின் பதிவில் “ அப்பாவிகளான சாத்தான்குளம் ஜெயராஜ், அவரது மகன் பென்னீக்ஸ் இருவரும் நீதிமன்ற காவலில் மர்மமான முறையில் இறந்துள்ளனர். போலீஸ் சித்ரவதையே காரணம் என்கிறார்கள். ‘தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டுக்குப்பிறகும் நாங்கள் திருந்தவில்லை’ என மீண்டும் நிரூபித்துள்ளது அம்மாவட்ட காவல்துறை” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 20-ம் தேதி, ஊரடங்கை மீறி, கடையை திறந்து வைத்ததாக கூறி, சாத்தான் குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். காவல்நிலையத்தில், பெனிக்ஸ் முன்பு, அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்தாகவும், அதனை தட்டிகேட்ட பெனிக்ஸுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில் தந்தை, மகன் இருவரும் கோவில்பட்டி கிளை சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். அவர்கள் இறந்ததற்கு போலீசாரின் கொடூர தாக்குதல் தான் காரணம் என்று கூறப்படுகிறது.

thoothukudi

போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து சாத்தான்குளத்தில் ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று வணிகர் சங்கம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

அரசு கூறியது ஒன்று.. நடந்தது ஒன்று.. சென்னையில் சமூக இடைவெளியின்றி வழங்கப்பட்ட கொரோனா நிவாரணம்..

Tue Jun 23 , 2020
சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில், சமூக இடைவெளியின்றி கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 19-ம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த 4 மாவட்டத்தில் உள்ள அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ. 1000 கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அந்தவகையில் 22-ம் தேதி முதல் 26-ம் தேதி […]
முதல்வர்

You May Like