இஸ்ரேல் நாட்டில் ஐநா சபை அதிகாரி ஒருவர் ஓடும் காரில் பெண் ஒருவருடன் உடலுறவில் ஈடுபடும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இஸ்ரேல் நாட்டில் ஐநா சபைக்கு வேலை செய்யும் அதிகாரி ஒருவருக்கு அலுவலக பணிக்காக ஒரு கார் தரப்பட்டுள்ளது. அதில் வெள்ளை நிற காரில் ஓடும் வழியில் ரெட் கலர் உடை அணிந்த பெண் ஒருவருடன் அவர் உடலுறவில் ஈடுபடும் காட்சி அனைவரையும் அதிர்ச்சி ஆக வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது. இதற்கு உலகமுழுவதும் கண்டனங்கள் வலுத்து வருகிறது.
இது குறித்து நடவடிக்கை எடுக்கும் படி ஐநா அதிகாரிகளை நியமித்துள்ளது. “அதிகாரியின் இந்த நடவடிக்கையை ஐநாவால் ஜீரணிக்க முடியவில்லை. இவற்றை எல்லாம் அவர்கள் வீடுகளிலோ ரூம்களிலோ வைத்துகொள்ள வேண்டும். அலுவலக பணிக்காக கொடுத்த காரை தவறாக பயன்படுத்தியது நிறுவனத்தை அவமதிப்பதாக உள்ளது. இது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடும். விசாரணை முறையாக நடைபெற்று இதற்கு தக்க தண்டனை வழங்கப்படும்” என ஐநா செய்தி தொடர்பாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது நெட்டிசன்களும் அந்த அதிகாரியை வறுத்து எடுத்து வருகின்றனர்.