இனி மருத்துவமனை போன்ற இடங்களில் காற்றில் உள்ள கொரோனா வைரஸை இப்படி கொல்லலாம்..! சீன வரைபடத்தில் அக்சாய்-சின்..! விக்கிப்பீடியா காட்டியதால் கடுப்பான இந்தியா..! பாம்பனை நோக்கி வேகமாக நகரும் புரெவி புயல்.. தென் தமிழகத்திற்கு ரெட் அலர்ட்.. ரஜினியின் திடீர் அறிவிப்பு.. குஷியில் பாஜக.. 2021-ல் தமிழகத்திலும் தாமரை மலருமா..? அரிய வகை உயிரினம் சருகுமான் குட்டி பிறக்கும் அற்புத காட்சி..! பிரமிட் முன்பு பழங்கால உடையுடன் போஸ் கொடுத்த மாடல்..! கைது செய்த போலீஸ்..! கடந்த கால நினைவை ஏற்படுத்தும் புரவி புயல்..! 2000ஆம் ஆண்டு நினைவலைகள்..! இனி இருந்த இடத்திலேயே ஓபிசி சான்றிதழை நீங்களே விண்ணப்பிக்கலாம்..! முழு விவரம் இதோ..! ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரே பாஜக நிர்வாகி தானாமே.. "அவருக்கு நடிக்க பிடிக்கவில்லை" சீரியலில் இருந்து விலகிய கார்த்தி குறித்து கூறிய ஜனனி..! தனது வேலையை காட்டும் புரவி புயல்..! 'இந்த' மாவட்ட மக்கள் உஷாராக இருக்க வேண்டும்..! “தலைவரே எந்த ஜனவரின்னு சொல்லலயே..” ரஜினியின் அரசியல் அறிவிப்புக்கு நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்.. வேறு பெண்ணை திருமணம் செய்த காதலன்..! புதுப்பெண்ணின் கண்ணில் ஃபெவி க்விக் ஊற்றிய காதலி..! “என் உயிரே போனாலும் பரவாயில்லை.. மக்கள் நலனுக்காக உழைப்பேன்” ரஜினிகாந்த் பேட்டி.. கர்ப்பிணி பெண் வயிற்றில் தர்பூசணி..! அதுக்குள் இருந்த பொருளால் அதிர்ச்சி..!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முழு அனுமதி: மத்திய அரசு அதிரடி முடிவு..!

பொது துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


air india
கடனில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான, ஏர் இந்தியாவை விற்பதாக மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவை சேர்ந்த அல்லது இந்திய நிறுவனங்களுடன் கைக்கோர்த்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ மட்டுமே அந்நிறுவனத்தை விற்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், டில்லியில், பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர், செய்தியாளர்களிடம் பேசினர்.

அப்போது, அமைச்சரவைக் குழு கூட்டத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளை வாங்க, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு அனுமதி அளிப்பது என, முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. தற்போது, விமான சேவை நிறுவனத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான வரம்பு, 49 சதவீதமாக உள்ளது. இது ஏர் இந்தியாவிற்காக, 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், வெளிநாடு வாழ் இந்தியர்களின் முதலீடு, விதிமுறைகளை மீறாத வகையில், உள்நாட்டு முதலீடாக கருதப்படும். தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்கும் வகையில், 2013ம் ஆண்டின் நிறுவனங்கள் சட்டத்தில், 72 திருத்தங்கள் செய்ய, கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டனர். இதன்படி, அபராத வகையைச் சேர்ந்த, 66 குற்றங்களில், 23 குற்றங்கள், வேறு பிரிவிற்கு மாற்றப்படும். பல்வேறு பிரிவுகளில், குற்றங்களுக்கான சிறைத் தண்டனை நீக்கப்படும், அபராதம் குறைக்கப்படும். ஒரு நிறுவனம், சமூக பொறுப்புணர்வு பணிகளுக்காக செலவிடும் தொகை, 50 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருந்தால், சமூக பொறுப்புணர்வு குழு அமைக்கத் தேவையில்லை.

Capture

இதனைத் தொடர்ந்து, ஏப்ரல் 1-ம் தேதி வங்கிகள் இணைப்பு பொது துறையைச் சேர்ந்த, 10 வங்கிகளை ஒன்றிணைக்கும் திட்டம், ஏற்கெனவே அறிவித்தபடி அமலுக்கு வரும். இதன்படி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா, ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் ஆகியவை, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் இணையும். சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியுடனும், அலகாபாத் வங்கி, இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படும். ஆந்திரா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகியவை, யூனியன் பேங்க் ஆப் இந்தியாவுடன் இணைய உள்ளது என தெரிவித்தார்.

1newsnationuser4

Next Post

திருச்சியில் 11 மாத குழந்தைக்கு கொரோனா...அரசு மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு...

Thu Mar 5 , 2020
திருச்சி வழியாக மலேசியா, சிங்கப்பூரில் இருந்து விமானத்தில் வந்த பயணிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டதில் 11மாத குழந்தை உட்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்துள்ளது. இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டவர்களும் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகே பயணத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.இந்நிலையில், திருச்சி வழியாக மலேசியா, சிங்கப்பூரில் இருந்து […]
trichy corona virus

You May Like