இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..! 50 லட்சம் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க அரசு திட்டம்.. எப்போது முதல் தெரியுமா..?

6 பிரதமர்களின் கீழ் கேபினட் அமைச்சர் பதவி வகித்தவர்..!! ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல்..

பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம் விலாஸ் பாஸ்வான் நேற்று டெல்லி மருத்துவமனையில் காலமானார்.

ராம் விலாஸ்

74 வயதான அவருக்கு, சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர் அதில் இருந்து மீண்டு வந்தார். இந்த சூழலில் நேற்று அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த தகவலை அவரது மகன் ட்விட்டரில் பதிவிட்டுளார்.

இதுகுறித்து அவரின் மகன் சிராக் பாஸ்வான் வெளியிட்டுள்ள ட்விடர் பதிவில் “அப்பா … இப்போது நீங்கள் இந்த உலகில் இல்லை, ஆனால் நீங்கள் எங்கிருந்தாலும் நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பதை நான் அறிவேன். மிஸ் யூ பாப்பா” என்று குறிப்பிட்டுள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வானுக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என்றும், டெல்லி மற்றும் மாநில தலைநகரங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். பாட்னாவில் நாளை அவரது உடல் தகனம் நடைபெறும்.

மத்திய அமைச்சர் பாஸ்வானின் மறைவுக்கு ட்விட்டரில் பல்வேறு அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் குடியரசு ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரசின் ராகுல் காந்தி, பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்திய அரசியலில் முக்கியமான தலைவர்களில் ஒருவராக அறியப்பட்ட ராம் விலாஸ் பாஸ்வான் 1989 முதல் அமைக்கப்பட்ட கிட்டத்தட்ட அனைத்து மத்திய அரசாங்கங்களிலும் அமைச்சராக இருந்து வி.பி.சிங்கின் அமைச்சரவையில் தொடங்கி ஆறு பிரதமர்களின் தலைமையில் உருவான அமைச்சரவையில் இடம்பெற்று மக்களுக்கு சேவை செய்தார். அவர் தற்போது, பிரதமர் மோடியின் அமைச்சரவையில், அவர் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இலாகாக்களின் பொறுப்பாளராக இருந்தார்.

1960களில் ராஜ்குமார் தேவி என்பவரை திருமணம் செய்து கொண்ட ராம் விலாஸ் பாஸ்வானுக்கு, உஷா, ஆஷா ஆகிய மகள்கள் உள்ளனர். எனினும், 1981-ம் ஆண்டு, வேட்பு மனு தாக்கல் செய்த போது முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அவர் அறிவித்தார். பின்னர் 1983-ல் விமான பணிப்பெண்ணாக இருந்த ரீனா சர்மாவை திருமணம் செய்து கொண்ட பாஸ்வானுக்கு சிராக் பாஸ்வான் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

சிறுமியை வன்கொடுமை செய்த நபருக்கு ஊசி மூலம் ஆண்மை அகற்றம்..! இனி இதுதான் தண்டனையாம்..!

Fri Oct 9 , 2020
16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ரசாயன ஊசி செலுத்தி அவரின் ஆண்மை அகற்றப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள், பாலியல் அத்துமீறல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதை கட்டுப்படுத்தும் வகையில் பல நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், தண்டனைகளையும் கடுமையாக்கி, புதிய சட்டத் திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஆனாலும், இந்த அக்கிரமம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், கஜகஸ்தான் நாட்டில் 16 வயது சிறுமியை பாலியல் […]
இந்தியாவிலேயே கொரோனா தடுப்பு மருந்து ரெடி..! கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்..!

You May Like