அரசின் முடிவில்லாத ஆணவம்.. ஒட்டுமொத்த நாட்டிற்கும் பொருளாதார பேரழிவை ஏற்படுத்தியுள்ளது – ராகுல்காந்தி பேங்கில் வேலை வாங்கி தருவதாக கூறி பலான தொழிலுக்கு ஆள் சேர்த்து வந்த நபர் கைது…! ஒரு அமைச்சரே இப்படி பேசினால் எப்படி..? ஜெயிலே அவங்களுக்காக கட்டப்பட்டது தானாம்.. செல்லூர் ராஜு பேச்சு.. காதலிக்க மறுத்த சிறுமி..! குளிக்கையில் வீடியோ எடுத்து மிரட்டியதால் தற்கொலை..! இருவருக்கும் வாய் பேச முடியாது தான்.. ஆனால் இதயங்கள் பேசிக் கொண்டது..! நெகிழ்ச்சியான காதல் திருமணம்..! இன்னும் 20 ஆண்டுகளில் அந்தமான் நிக்கோபார் தீவுகள் கடலில் மூழ்கி விடும்…! தலைமுடியை விட 100 மடங்கு சிறிய 'அல்ட்ராசவுண்ட் டிடெக்டர்' கண்டுபிடிப்பு..! மின்வாரியத்திற்கு 12 கோடி ரூபாய் நஷ்டம்..! மின்கட்டணம் உயரும் அபாயம்..! ரிஷிவந்தியம் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராஜ் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்… விஜிபியில் 30ஆண்டுகளாக சிலை மனிதராக இருந்தவரையே ஆட்டிப்பார்த்த கொரோனா…! நாம யூஸ் பண்ற 22 மாத்திரை, மருந்துகள் தரமற்றவையாம்..! என்னென்ன மாத்திரைகள் தெரியுமா?.. கிரவுண்ட்ல ஒருத்தரும் இல்ல ஆனா 4, 6 அடிக்கும்போது ரசிகர்களின் ஆரவாரம் சத்தம் கேட்குதே அது எப்படி? மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்…! புதைக்கும் நேரத்தில் வெளிவந்த உண்மை…! எனக்கு ராஜாவா நான் வாழுறேன்..! தனக்குத் தானே சிலை வைத்து அழகு பார்த்த தொழிலாளி..! போர் பதற்றம் நீடிக்கும் நிலையில், இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை…

பல்கலை மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றலாம் – மத்திய அரசு

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள் ஜூலை 31ம் தேதிவரை வீட்டில் இருந்து பணியாற்றும் வகையில் அனுமதி அளித்து மத்தியஅரசு அறிவித்துள்ளது.

anna university

கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஜூலை 31 வரை நீட்டிக்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் அனைத்து பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை எப்போது திறக்க வேண்டும், வகுப்புகள் எப்போது நடத்த வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக் குழு சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தாலும் ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் பணிக்கு வர வேண்டும் என்று சில மாநிலங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 30 சதவீதம், 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம் என்றும் தெரிவித்துள்ளன. இது ஆசிரியர்களுக்கும் மற்றவர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பணிக்கு வந்தவர்கள் பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பணிக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். ஆனால், நிர்வாகத் தரப்பில் வற்புறுத்துகின்றனர்.

HRD Minister Ramesh Pokhriyal BHU webiner 15 55 screenshot

இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த நிலையில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நேற்று ஒரு அவசர கடிதத்தை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பியுள்ளது. அதில் தெரிவித்து இருப்பதாவது:
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகம் (ஏஐசிடிஇ) தேசிய தேர்வுகள் முகமை (என்இஏ) மற்றும் தன்னாட்சி பெற்ற பிற உயர்கல்வி நிறுவனங்கள் ஜூலை 31ம் தேதிவரை மூடப்பட வேண்டும். இருப்பினும் கொரோனா தொற்று சூழல் கருதி, ஆன்லைன் வகுப்புகள், இடைவெளியுடன் கூடிய வகுப்புகளுக்கும் அனுமதிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற பணியாளர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள், பல்வேறு கல்விச் செயல்பாடுகளுக்கு இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் இந்த விதிகளை தங்களின் அதிகாரம் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பின்பற்றுவதா வேண்டாமா என்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று சூழல் கருதி, ஆன்லைன் வகுப்புகள், இடைவெளியுடன் கூடிய வகுப்புகளுக்கும் அனுமதிக்கப்படுகிறது.

1newsnationuser4

Next Post

ஒன்பிளஸ் அறிமுகப்படுத்திய புதிய ஸ்மார்ட் டீவி...

Sat Jul 4 , 2020
நேற்று, ஒன்பிளஸ் நிறுவனம் இரண்டு புதிய ஸ்மார்ட் டீவி மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் டீவி யு மற்றும் ஒன்பிளஸ் டீவி ஒய் சீரிஸ் தொடங்கப்பட்டுள்ளன. ஒன்பிளஸ் டீவி யு 55 அங்குல திரை அளவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் டீவி ஒய் சீரிஸ் மலிவு விலையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 32 அங்குல மற்றும் 43 அங்குல அளவுகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.ஒன்பிளஸ் டீவி ஒய் சீரிஸின் அடிப்படை 32 […]
oneplus tv u series news 1593694504266

You May Like