முகேஷ் அம்பானி உலக அளவில் மிகப்பெரும் வணிகர். இந்தியாவில் 4G, 5G இணைய வேகத்தை அனைத்து தரப்பிற்கும் தனது ஜியோ மூலம் வழங்கி வருகிறார் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி.

மும்பையில் இருக்கும் முகேஷ் அம்பானியின் பங்களா மும்பையில் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிக மதிப்பு மிக்க தனியார் குடியிருப்பு சொத்துகளில் ஒன்று தான் முகேஷ் அம்பானியின் அன்டிலியா இல்லம். இந்த வீட்டில் முகேஷ் அம்பானி தனது மனைவி நீட்டா அம்பானியுடன் வசித்து வருகிறார். இவரது மூன்று குழந்தைகளான ஆனந்த், ஆகாஷ் மற்றும் இஷா ஆகியோர் இந்த பங்களாவில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
தெற்கு மும்பையில் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்துள்ளது இந்த அன்டிலியா இல்லம் 27 தளங்களை கொண்டுள்ளது. இதன் ஒவ்வொரு கூரையும் அதிக உயரம் கொண்டுள்ளதால் 60 மாடி கட்டிடம் போல் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. இதன் மொத்த மதிப்பு ரூ.15,000 கோடி. இது தான் உலகிலேயே இரண்டாவது விலையுயர்ந்த பங்களாவாக உள்ளது.

இங்கு மூன்று ஹெலிகாப்டர் இறங்கு தளம் உள்ளது. 168 கார்கள் கேரேஜ், அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட மினி தியேட்டர் இருக்கிறது. மொட்டை மாடி தோட்டம், நீச்சல் குளம், ஸ்பா, சுகாதார மையம், ஒரு கோவில் உள்ளது. அதோடு ஒரு பனி அறை உள்ளது. முழு நாளும் வேலை செய்யும் அளவிற்கு 600 ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கான தங்கும் இடமும் உள்ளது. இந்த கட்டிடம் 8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை தாங்கும் அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்கு எப்போதும் அனுபவம் வாய்ந்த மெக்கானிக்குகள், பணியாளர்கள் உள்ளனர்.
இந்த பங்களா கட்டப்பட்டது முதல் பல்வேறு சட்ட சிக்கல்கள் வந்தது. அனாதை குழந்தைகள் இல்லம் இருக்கும் இடத்தில் கட்டிடம் கட்டியது, மும்பை கட்டிடங்களில் ஹெலிபேட் வைத்தது, சுற்றுசூழலை கெடுக்கும் வகையில் ஹெலிகாப்டர் சத்தம் என அனைத்தையும் தாண்டி முகேஷ் அம்பானி இந்த வீட்டில் 2012 ல் தனது குடும்பத்துடன் குடியேறினார்.