செக்…! இனி காவலர்கள் பணியில் இருக்கும் போது இதை எல்லாம் செய்ய கூடாது…! அரசு அதிரடி தடை செய்து உத்தரவு…!

காவலர்கள் பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்களை உருவாக்குவது, தடை செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச காவல்துறைக்கு அரசு சமூக ஊடகக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது, காவலர்கள் பணியில் இருக்கும்போது சீருடையில் ரீல்களை உருவாக்குவது, இணையதளங்களில் படங்களைப் பகிர்வது மற்றும் ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிடுவதை தவிர்க்க வேண்டும்.

மாநில காவல்துறை இயக்குநர் டிஎஸ் சவுகான் பரிந்துரைத்த சமூக ஊடகக் கொள்கைக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் படி, காவலர்கள் பணியில் இருக்கும் நேரத்தில் மொபைல் போன்களில், “வீடியோக்கள் அல்லது ரீல்கள் போன்றவற்றை சீருடையில் எடுப்பது அல்லது எந்தவொரு பணியாளர்களும் தங்கள் தனிப்பட்ட சமூக ஊடக தளத்தில் நேரடியாக ஒளிபரப்புவது தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காவல் நிலையம், அலுவலகம் போன்றவற்றின் ஆய்வு மற்றும் பங்கேற்பின்னை நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும். போலீஸ் பயிற்சியில் அல்லது துப்பாக்கிச் சூடு மற்றும் நடவடிக்கைகள் தொடர்பான வீடியோக்களை பதிவேற்றுவது அரசு மற்றும் தனிப்பட்ட சமூக ஊடக தளங்களில் தடைசெய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்திடம் இருந்து முன் அனுமதி இல்லாமல் அரசு மற்றும் தனிப்பட்ட சமூக ஊடக தளங்களில் இருந்து பணம் எடுப்பதையும் இந்தக் கொள்கை தடை செய்கிறது. “பெண்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள், பழங்குடியினரின் கண்ணியத்தை பாதிக்கும் அல்லது அவர்களின் கண்ணியத்திற்கு மாறாக கருத்துக்களை பதிவு செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சூடு பிடிக்கும் ஈரோடு இடைத்தேர்தல்...! பணம் விநியோகத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் அதிரடி...!

Thu Feb 9 , 2023
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் செலவினத்தை கண்காணிக்க வருமானவரித் துறை 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 27.02.2023 அன்று இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி, தேர்தல் செலவைக் கண்காணிக்க வருமானவரி தலைமை இயக்குநரகத்தின் உதவியை தேர்தல் ஆணையம் நாடியுள்ளது.இதையடுத்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் வருமானவரி தலைமை இயக்குநரகம் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையை அமைத்துள்ளது. பொதுமக்களிடமிருந்து புகார்கள் மற்றும் […]

You May Like