பிரதம மந்திரியின் விவசாய ஊக்கத் தொகை கடந்த 2019-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 13 தவணை ஊக்கத்தொகை விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக பற்று வைக்கப்பட்டுள்ளது. PM KISSAN திட்டத்தில் தவணைக்கு ரூ. 2000/- வீதம் ஆண்டுக்கு மூன்று தவணையாக ஒரு விவசாய குடும்பத்திற்கு ரூ.6000/- விவசாய இடுபொருள் செலவினங்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயனாளிகள் தொடர்ந்து பயனடைய ekyc, நில ஆவணங்கள் பதிவேற்றம் மற்றும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைத்தல் போன்ற பணிகளை முடித்திருக்க வேண்டும். இந்திய தபால் வங்கி ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்க முன் வந்துள்ளது. மேலும் PM KISSAN ekyc தபால் நிலையத்தை அணுகி முடிக்க வேண்டும். மேலும் PM KISSAN திட்டத்தில் பயன்பெறும் மேற்கூறிய பணிகளை முடிக்காத பயனாளிகள் அனைவரும் நில ஆவணங்களை தங்கள் பகுதி வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தில் இந்த பணிகளை மேற்கொள்ளலாம்.
மேலும் ekyc பணியை தானாகவே PM KISSAN வலைதளத்தில் அல்லது பொதுசேவை மையங்களில் அல்லது தபால் நிலையத்தை அல்லது வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டும், வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க சம்மந்தப்பட்ட வங்கி கிளையை அணுக வேண்டும். மேற்கூறிய பணிகள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே PM KISSAN 14 வது தவணை மற்றும் அதனைத் தொடர்ந்து உதவித்தொகை பெற இயலும்.