நாங்கள் திரும்பவும் வந்துட்டோம்… Paytm ஆப்! கிசான் முறைகேடு… சரியான தகவல் அளித்தால் வெகுமதி… சிபிசிஐடி அறிவிப்பு! SBI வேலைவாய்ப்பு 2020 : சிறப்பு கேடர் அதிகாரிகளுக்கான காலி பணியிடங்கள் அறிவிப்பு.. முழு விவரம் உள்ளே.. காணல காணல கண்மாய காணல..! எப்டியாச்சும் கண்டுபிடிச்சு கொடுங்க.. இல்லன ஊரவிட்டே போறோம்..! சாத்தான்குளத்தில் மீண்டும் பரபரப்பு.. காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது கொலை வழக்குப்பதிவு.. காரணம் என்ன..? துணை முதல்வர் பதவி வேண்டும்… கடவுளுக்கு கடிதம் எழுதிய கர்நாடக அமைச்சர்! பணக்கார நாடுகளுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி..! அமெரிக்காவின் ஆய்வறிக்கையால் அதிர்ச்சி..! கொரோனா தாக்கம்… 15 கோடி குழந்தைகள் வறுமையில் தவிப்பு… அதிர்ச்சி தகவல்! மனைவிகள் கொடுத்த அந்த மாத்திரையால் ஏற்ப்பட்ட விபரீதம்..! சசிகலா வெளியே வந்தால் மாற்று அரசியல் நிச்சயம்..! அன்வர் ராஜாவின் கருத்தால் அதிமுகவில் சலசப்பு..! நிச்சயிக்கப்பட்ட பெண் வேறு ஒருவருடன் ஓட்டம்..! தன் 13 வயது சிறுமியை கட்டி வைத்த தாய்…! பிளேஸ்டோரில் இருந்து Paytm ஆப் நீக்கம்! கூகுள் நிறுவனம் நடவடிக்கை… பக்கத்து வீட்டுக்காரன் மனைவியுடன் உல்லாசம்…! கணவர் வெளியூரில் வேலை பார்த்ததால் மலர்ந்த கள்ளக்காதல்..! திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறுகிறதா..? திருமாவளவனின் சூசக பதிலால் கூட்டணியில் குழப்பம்.. கழிப்பறைக்குச் சென்ற மாணவியை கற்பழிக்க முயன்ற டி.டி.ஆர்…! அரக்கோணத்தில் அதிர்ச்சி சம்பவம்

ட்ரம்ப் உருவாக்கும் "ரிவெஞ்சர்ஸ்" டீம்..அயர்ன்மேன் ஆகிறதா இந்தியா?…

இந்தியாவும், ரஷ்யாவும் ஜி7 நாடுகளில் இணைய வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்து இருப்பது உலக அரசியலில் மிக பெரிய அறிவிப்பாக பார்க்கப்படுகிறது.

g765 1590928844

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரானா வைராசால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா. அமெரிக்காவை வீழ்த்த சீன அரசு இந்த வைரசை வேண்டுமென்றே பரப்பியதாக அதிபர் ட்ரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். மேலும், இதற்காக, பொருளாதார ரீதியாக சீனாவை பழிவாங்க பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தான், தற்போது புதிய திருப்பமாக இந்தியாவும், ரஷ்யாவும் ஜி7 நாடுகளில் இணைய வேண்டும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். அதோடு ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைய வேண்டும் என்று கூறியுள்ளார். ஜி7 குழு மிகவும் பழமையான குழுவாக மாறிவிட்டது. அதனால் அவர்களின் அடுத்த கூட்டத்தை இப்போது நடத்த கூடாது. இதை இன்னும் வலுவாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

g7 france 1590928835

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் அடங்கிய ஜி7 அமைப்பில் தான் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யாவை சேர்க்க டிரம்ப் முயன்று வருகிறார்.

சீனாவிற்கு எதிராக ஒரு வலுவான அமைப்பை உருவாக்கும் நோக்கிலேயே டிரம்ப் இந்த திட்டத்தை முன்வைத்துள்ளதாக கூறபடுகிறது. ஜி7 நாடுகள் + இந்த மூன்று நாடுகள் என்று 10 நாடுகளை சீனாவிற்கு எதிராக டிரம்ப் திரட்ட பார்க்கிறார். ஏற்கனவே நேட்டோ படைகள் அமெரிக்காவிற்கு உதவ தயாராக இருக்கிறது. அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவிற்கு ஆதரவாக ஜி10 நாடுகளும் இருக்கும் என ட்ரம்ப் எதிர்பார்க்கிறார்.

n1881724280f462a1fc243be89851c8876c0f5cbef34a5e9e41d988704632bd169ff187162

ஏற்கனவே, இந்தியா மற்றும் சீனா இடையே எல்லை பிரச்சனை நிலவி வரும் நிலையில், கொரானா விவகாரத்தில் சீனாவிற்கு எதிரான போக்கிலேயே இந்தியா உள்ளது. அதேசமயம் அதிபர் ட்ரம்ப் இந்தியாவுடன் தொடர்ந்து நெருக்கம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், கிழக்கு ஆசிய நாடுகளில் சீனாவிற்கு எதிராக செயல்பட வேண்டும் எனில் இந்தியா போன்ற வலுவான நாட்டின் ஆதரவு தனக்கு கட்டாயம் வேண்டும் எனவும் ட்ரம்ப் நினைக்கிறார்.

இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா சீனா மீது கடும் கோபத்தில் இருக்கிறது.கொரானாவால் உலகிலேயே மிக மோசமாக பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. அந்நாட்டின், மொத்த ஜிடிபியில் ஏற்கனவே 22% இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி ஆஸ்திரேலியா நிறுவனங்களை சீனா வளைத்து போட முயற்சித்து வருகிறது. இதனால் சீனாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே வர்த்தக சண்டை நடந்து வருகிறது. மேலும், தென் சீன கடல் எல்லையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே நடந்து வரும் சண்டையில் ஆஸ்திரேலியாவும் களமிறங்கி உள்ளது. தென் சீன கடல் எல்லைக்கு ஆஸ்திரேலியா போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. அங்கு ஆஸ்திரேலியா அமெரிக்காவிற்கு ஆதரவாக நிற்கிறது. இதனால் சீனாவிற்கு எதிராக ஜி7 நாடுகளில் ஆஸ்திரேலியாவை சேர்க்க டிரம்ப் முயன்று வருகிறார்.

g7 france 1590928835 1

ட்ரம்பின் அறிவிப்பில், ரஷ்யா இடம்பெற்று இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஆனால் டிரம்ப் சீனாவுடன் சண்டை போட தொடங்கியதில் இருந்தே ரஷ்யாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். சீனாவிற்கு நெருக்கமான ஒரே நாடு ரஷ்யா தான் என்பதால் அதை தங்கள் பக்கம் இழுக்க அமெரிக்கா முயன்று வருகிறது. ரஷ்யாவை தங்கள் பக்கம் கொண்டு வந்தால் சீனாவை எளிதாக எதிர்க்கலாம் என்று டிரம்ப் நினைக்கிறார்.

china54 1590929046

ரஷ்யாவும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஜி7 குழுவில் இணைய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இதனால் ரஷ்யா தனது ஏற்றுமதியை அதிகரிக்க முடியும். அதேபோல் தனது பொருளாதார சீர்குலைவை சரி செய்ய முடியும். அமெரிக்காவுடன் இன்னும் நெருக்கம் ஆக முடியும் என்று கூறபடுகிறது. சீனாவா, ஜி7 நாடா என்று பார்த்தால் கண்டிப்பாக ஜி7 நாடுகளைத்தான் ரஷ்யா தேர்வு செய்யும் என்கிறார்கள். இது சீனாவிற்கு பாதிப்பாக அமையும்.

இப்படி 10 நாடுகளை ஒன்று கூட்டி சீனாவை பொருளாதார ரீதியாக டிரம்ப் நெருக்குவார் என எதிர்பார்க்கபடுகிறது. அதோடு சீனா மீது பொருளாதார ரீதியான தடைகளை விதிக்கவும், சீனாவை பொருளாதாரா ரீதியாக மொத்தமாக முடுக்குவதே டிரம்பின் நோக்கம் என கூறப்படுகிறது.

1newsnationuser4

Next Post

கொரானா அதிகளவில் பரவ மோடி-ட்ரம்ப் இருவரே காரணம் - சிவசேனா

Sun May 31 , 2020
குஜராத், மும்பை மற்றும் டெல்லியில் கொரானா வைரஸ் பரவுவதற்கு அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை அழைத்துவந்து பிரதமர் மோடி நடத்திய நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சிதான் காரணம் என சிவசேனா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவில் கொரானா பாதிப்பு 1 லட்சத்து 80 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழகம் ஆகிய மாநிலங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் மகாராஷ்டிராவில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதி்கப்பட்டுல்ளனர், […]
557204

You May Like