ரோட்டில் கிடந்த சாக்கு மூட்டை! காயங்களுடன், நிர்வாண நிலையில் பெண் சடலம்!

உத்திர பிரதேசம் மாநிலத்தில் சாலையோரம் கிடந்த சாக்கு சாக்கு மூட்டையில் பிணம் இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலம் மீஈரட்டின் அருகே உள்ள கார்கோடா பகுதியில் சாலையோரம் சாக்கு முட்டை ஒன்று கிடந்தது. அது சந்தேகத்திற்கிடமான வகையில் இருந்ததால் அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை மூட்டையை திறந்து பார்த்த அப்போது காயங்களுடன் நிர்வாண நிலையில் ஒரு பெண் பிணம் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். என்னைத் தொடர்ந்து அந்த உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிரமான விசாரணையில் இறங்கி வருகின்றனர் இது தொடர்பாக பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசி டிவி காட்சிகளை பரிசோதித்து பார்த்தபோது மர்ம நபர் ஒருவர் மூட்டையை தோளில் சுமந்தபடி சம்பவ இடத்திற்கு வந்து அந்த மூட்டையை எங்கு வைக்கலாம் என வேவு பார்ப்பது பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் எப்படியோ லீக் ஆகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த சம்பவம் பற்றிய கருத்து தெரிவித்துள்ள போலீசார் சாக்கு மூட்டைக்குள் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் முகத்தில் பலமான காயங்களுடன் நிர்வாண நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டதாக தெரிவித்தனர். மேலும் இவரை யார் கொலை செய்தார்கள்?, அதற்குக் காரணம் என்ன? மேலும் இந்தப் பெண் யார் ?அவருடைய அடையாளங்கள் என்ன? அவர் எந்த பகுதியில் வசித்து வந்தார்? என்பது போன்ற விவரங்கள் குறித்து தீவிரமாக புலன் விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாடும் சாலை பகுதியில் சாக்கு மூட்டைக்குள் பிணம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இந்த வீடியோக்களை சமூகப் பொறுப்புணர்ந்து யாரும் ஷேர் செய்ய வேண்டாம் என காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுவதாக உத்திரபிரதேச போலீசார் அறிவித்துள்ளனர். இது போன்ற வீடியோக்களை சேர் செய்வதால் அதனை கண்டு குற்றவாளி யூகிக்க கூடும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

Baskar

Next Post

வயிற்று வலியால் துடித்த பெண்.! மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.!

Thu Feb 16 , 2023
ஆந்திர பிரதேச மாநிலத்தில் அறுவை சிகிச்சையின் போது பெண் ஒருவருக்கு ஒரு மீட்டர் நீளமுள்ள துணியை வயிற்றில் வைத்து தைத்த சம்பவம் எட்டு மாதங்களுக்குப் பின் வெளிச்சத்திற்கு வந்து பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பாக ஆந்திர மாநிலம் மசூலிணி பட்டினத்தைச் சார்ந்த 51 வயது பெண் ஒருவருக்கு வயிற்று வலி பிரச்சனை இருந்துள்ளது. இது தொடர்பாக அவர் என் டி ஆர் மாவட்டத்தில் உள்ள தனியார் […]

You May Like