உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி.! ராஜ்பவனில் பதவியேற்பு.!

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்த ரிது பஹ்ரி, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதி ஆனார். இவர் மாநிலத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம், நீதிபதி விபின் சங்கி ஓய்வு பெற்றதையடுத்து, நீதிபதி மனோஜ் திஹாரி, தற்காலிக தலைமை நீதிபதியாக பணியாற்றினார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, உத்தரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக திரு.ரிது பஹ்ரி பதவியேற்றார். ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மீத் சிங் ராஜ்பவனில் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

உத்தரகாண்ட் மாநிலத்தின், முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை நீதிபதி ரிது பஹ்ரி அடைந்தார். நீதிபதி ரிது பஹ்ரி, உத்தரகாண்ட் மாநிலத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்கும் முன்பு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

"புதிய சிக்கலில் விஜய் கட்சி.. 'TVK' பெயரை பயன்படுத்த முடியாது"! எம் எல் ஏ வேல்முருகன் அதிரடி.!

Wed Feb 7 , 2024
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் கடந்த வெள்ளிக்கிழமை தனது அரசியல் பயணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டார். மேலும் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்த அவர் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என பெயர் சூட்டினார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் இருந்தன. இந்நிலையில் அவரது கட்சி பெயருக்கு புதிய சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. விஜய் அரசியல் கட்சிக்கு தமிழக […]

You May Like