உத்ரகாண்ட் மாநிலத்தில் ரயிலில் சென்று கொண்டிருந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அவருடன் பயணித்த சக பயணிகள் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா பரிசோதனைக்காக ரத்த மாதிரியை வழங்கி இருந்த ரிஷிகேஷை சேர்ந்த 48 வயது நபர், காசியாபாத்தில் இருந்து டெஹ்ராடூன் செல்லும் ஜன் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளார். பயணத்தின் போது அவருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாக குறுந்தகவல் வந்ததை தொடர்ந்து, உடனடியாக கொரோனா கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அந்த நபர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பயணித்த ரயில் பெட்டியில் இருந்தவர்கள் 20 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.