உத்தரகாண்ட் மாநிலத்தில் மூத்த தாரத்தின் மகனை மிரட்டி நீண்ட நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்து வந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் நிலையில், ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் பாலியல் கொடுமைகளும் அரங்கேறி வருகின்றது. ஒரு சித்தி தன்னுடைய மூத்த தாரத்தின் மகனை தினம்தினம் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
உத்தரகண்ட் மாநிலத்தில் ஒருவருடைய மனைவி கொலை செய்யப்பட்டு இறந்துள்ளார். இதனால், தன்னுடைய 14 வயது மகனை கவனித்துக்கொள்ள அவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்துகொண்டார்.
இருப்பினும், அவரோ அவனைத் தன் மகனாக பார்க்காமல் கணவனாக பார்த்துள்ளார். தினம்தினம் அந்த 14 வயது சிறுவனை மிரட்டி அவர் பாலியல் உறவு கொண்டுள்ளார். ஒரு நாள் கணவன் மனைவிக்கு இடையில் சண்டை வந்துள்ளது.

எனவே, அந்த பெண் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் மீது புகார் அளித்துள்ளார். அப்பொழுது, விசாரணையில் அந்த சிறுவன் தனது சித்தி தன்னை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து கூறியுள்ளான். இதனால் காவல்துறையினருக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பின்னர் அந்த தந்தையிடம் விசாரித்த பொழுது அவருக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அதிர்ச்சி அடைந்த தந்தை அந்த பெண்ணின் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் குற்றவாளியான பெண்ணை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.